பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலைப் படித்த பின்னரே இந்நூலை எழுதும் பணியில் ஈடுபட்டேன்; பின்னவர் அளித்த ஊக்கத்தால் அப்பணியை நிறைவேற்றினேன். இந்நாடகத்தில், சருவிலகன் களவுத் துறையைச் சார்ந்த நால்வருக்கு இப்படி வணக்கம் தெரிவிப்பான்: ‘'சிவ குமாரனும் முதலாசிரியனுமாகிய முருகப்பிரானுக்கு வணக்கம்... கனகசக்தியாசிரியனுக்கு வணக்கம். பாற்கர நந்தியாசிரியனுக்கு வணக்கம். என்னை முதல் மாணாக்க னாகக் கொண்ட யோகாசாரியானுக்கு வணக்கம். என் மாட்டு உவகைமிக்க அந்த யோகாசாரியான் பச்சிலை மையை எனக்கு உதவினான். ' நானும், சருவிலகன் நடையிலேயே கல்வித்துறையைச் சார்ந்த நால்வருக்கு இப்படி வணக்கம் தெரிவிக்கிறேன்: முதலாசிரியராகிய சூத்திரகனுக்கு வணக்கம். பண்டிதமணிக்கு வணக்கம். டாக்டர் தேவஸ்தாலிக்கு வணக்கம். என்னை மாணாக்கனாகக் கொண்ட பேராசிரியர் இராமானுசனாருக்கு வணக்கம். என் மாட்டு அன்புமிக்க பேராசிரியர் 'அறிமுகம் ஒன்றை எனக்கு உதவினார். - புத்தர்இல்லம், மீ. இராசேந்திரன் சிவகங்கை.