30 மண்ணியல் சிறுதேர் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போதும்-பதம் பார்க்க நாம், இன்னொரு சோற்றையும்-சூத்திரகனின் மேடைக்கலை நுணுக்கத்தையும் (Stage technique) பார்ப்போமே! மிருச்சகடிகத்தின் நான்காம் அங்கத்தில் வசந்தசேனை, மதனிகையை நோக்கிச் 'விசிறியை எடுத்துக்கொண்டு விரைவில் வா' என்கிறாள். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி விசிறியை எடுக்கவரும் மதனி கையைச் சருவிலகன் சந்திப்பதாகச் சூத்திரகன் காட்சிய மைப்பை இயல்பாக்கியுள்ளார். சாருதத்தத்திலோ, வெளியேயிருக்கும் சஜ்ஜலகன் (சருவிலகன்) வீட்டி னுள்ள்ே வசந்தசேனையோடு உரையாடிக் கொண்டிருக்கும் மதனிகையை உரக்கக் கூவி அழைக்கிறான். இது முரண் பாடாக மட்டுமன்று; முட்டாள்தனமாகவும் இருக்கிறது. காட்சிகளை அமைக்கும் முறையிலும் பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும் வேறு எவ்வகையிலும் சாருதத்தத்தைக் காட்டிலும் மிருச்சகடிகம் பன்மடங்கு சிறந்துள்ளது எனலாம். இறுதியாக, இதுவரை (இப்பகுதியில்) கூறியவற்றைக் தொகுத்துரைப்போம்: (1) சாருதத்தம், மிருச்சகடிகம் ஆகிய இரண்டிற்குமுரிய கதை, கதாசரித்சாகரம், தசகுமார சரிதம், பிருகத்கதா முதலிய முதுநூல்கள் வழங்கிய கொடையாகும். (2) சாருதத்தம், மிருச்சகடிகத்திற்கு முன்பு தோன்றிய தனிநூல்; அது மிருச்சகடிகத்தின் நாடக அமைப்புக்குக் கை கொடுத்துள்ளது. (3) மிருச்சகடிகத்தின் தனித்தன்மையைச் சார்புப் பொருள் காட்டுகிறது; சார்புப் பொருள் மட்டும் மிருச்சகடிகத்தின் ஆரம்ப முதல் தறிப்பிடப்படவில்லையென்றால், ஒருவேளை ாருதத்தத்தின் நான்கு அங்கத்தையும் அப்படியே கடன் வாங்கிக்கொண்டு முழு நாடகத்திற்கும் உரிமை கொண்டாடிவிட்டார் சூத்திரகன் என்னும் குற்றச்சாட்டு
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/32
Appearance