பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 3H வலிமை பெறலாம். (4) உண்மையில் மூலச்சான்றுகள் இல்லையென்றால் மிருச்சகடிகத்தில் உள்ள உயிருள்ள மாற்றங்களை நாம் அறிவதற்கில்லை. எனவே, மூலமனைத்தும், சூத்திரகனின் கீர்த்தியை மேலும் ஒளிரச் செய்யும் நெய்யே தவிர, நீரல்ல - அணைக்கும் நீரல்ல 4 புகழ் மணம் நாடகம் கண்ணாற் காணும் காவியம் ஆகும். இதனை வடமொழியாளர், திருசிய காவியம் (Drsya Kavya) என்பர். எப்போது ஒரு நாடகம் அரங்கில் திறம்பட நடிக்கப்படுகிறதோ - ஆயிரக்கணக்கான மக்களின் விழிகட்கு விருந்தளிக்கிறதோ - அப்போதுதான் அது, “காவியங்களுள் நாடகம் சிறந்தது (காவ்யேஷ நாடகம் ரம்யம்) என்னும் மொழியை மெய்ப்பிக்கும். உச்சியினி நகரத்தில் ஒருகாலத்தில் மிருச்சகடிகம் அரங்கேற்றப்பட்டது என்பது பெருமைதான் இருந்தாலும் 1924 ஆம் ஆண்டில் முற்றும் அமெரிக்கர்களால் நியூயார்க் scogougišić5th Qaārsīlai (New York Neighbourhood Play- house) நடிக்கப்பட்ட இந்தியரல்லாத சுவைஞர்களாலும் பாராட்டப்பட்டதே, அதுதான் பெருமையுள் எல்லாம் தலை! திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ்செய்தல் வேண்டும். வில்சன் (Wilson) GLTaip வெளிநாட்டாரால் சேக்ஸ்பியர் நாடகங்களுக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது, மிருச்சகடிகம். "இதன் கதைப் புதுமை, நிகழ்ச்சியொழுக்கு, எளிய நடை, வாழ்க்கைத்