- ஒரு மதிப்பீடு 43 செலவு செய்யப்படுகிறது. இது தேவைதானா? ஆழ்ந்து நோக்கினால் தேவைதான் என்று ஒப்புக்கொள்வோம். சாருதத்தன் இல்லாதவன்; வசந்தசேனையோ குடிப் பெருமையில்லாதவள். இருவேறு நிலையைச் சார்ந்த இவர்களுடைய காதல் தூயது செவ்விது-என்று சமூகம் நம்பவேண்டும். சமூகம் இருக்கட்டும், முதலில் காதலர் இருவரும் நம்ப வேண்டுமே பொருட்பெண்டிர்குலத்தில் பிறந்த ஒருத்தி பொருள் இழந்த தன்னைக் காதலிப்பது பொய்யல்ல என்று சாருதத்தன் ஐயத்திற்கிடமின்றிப் புரிந்து கொள்ளவேண்டும். அதேபோல் சாருதத்தன் "குணம் என்னும் குன்றேறி நிற்பவனாக வசந்தசேனையின் பார்வையில் விளக்கமாகப்பட வேண்டும் அப்போதுதான் இவர்கள் காதல் மெய்யாகும்; இரும்பைப்போல் உறுதியாகும். ஏற்கனவே காதல் கொண்டிருக்கும் சாருதத்தனும் வசந்தசேனையும் முதல் அங்கத்தில் மீண்டும் சந்திக்கும் போது கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு உரையாடலாம்; உறவாடலாம். ஆனால் இருவரும் தயங்குகிறார்கள். தயக்கத்திற்குக் காரணம். அவர்கள் நிலை (Status) பற்றி அவர்கள் கொள்ளும் கவலைதான். தன் இல்லத்துள் சகாரனுக்கு அஞ்சி நுழைந்த வசந்தசேனையை இருட்டில் உற்றுநோக்காது இரதணிகை என்று ஏவல் கொண்டதற்குச் சாருதத்தன் வசந்தசேனையிடம் வருத்தம் தெரிவிக்கிறான்; தலை வணங்குகிறான். வசந்த சேனையோ, தகுதியற்ற குடியில் பிறந்த தான், சாருதத்தன் இல்லத்துள் நுழைந்ததற்காக அருள்புரிய வேண்டுகிறாள்; தலை வணங்குகிறாள். இங்ங்னம், இருவரும் வணங்குவதைப் பார்த்து மைத்திரேயன், 'நெல் விளைந்த கழனிகள்போலத் தலையோடு தலை பொருந்தப் பெற்றிருக்கின்றீர்கள்' என்கிறான்.
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/44
Appearance