பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மண்ணியல் சிறுதேர் இவ்வாறு, மெல்ல மெல்ல ஆனால் உறுதியாகவசந்தசேனை சாருதத்தன் காதல் வளர்வதாகவும், ஐந்தாம் அங்கத்தின் இறுதியில் இருவரும் கருத்தொருமித்து’ இணைவதாகவும் ஆசிரியர் காட்டுவது பொருத்தமா யிருக்கிறது. இருவரின் மென்மையான காதலை மேன் மையான காதலாக்க ஆசிரியர் பல நிகழ்ச்சிகளையும் சகாரன், சம்வாககன், சருவிலகன், சூர்ணவிருத்தன், கன்னபூரகன் முதலிய மாந்தர்களையும் படைத்துள்ளார். ஐந்தாம் அங்கத்தின் இறுதியில் முழுமதியாய் ஒளிரும் காதல், ஆறாம் அங்கத்திலிருந்து முகிலிடை மதியாய்த் தடைப்படுகிறது; ஒன்பதாம் அங்கத்தில் தண்டிக்கப் படுகிறது. பத்தாம் அங்கத்தில் காதல் விடுதலை யடைகிறது; அறம் வெல்கிறது; கருத்தொருமித்த காதலர் இருவரும் ஆதரவுபட்ட இல்லறத்தை மேற்கொள் கிறார்கள். முதல் அங்க நிகழ்ச்சிக்கு முன்னர் சாருதத்தன் வசந்தசேனைக்கிடையே அரும்பிய காதல் ஐந்தாம் அங்கம் வரை மொட்டாகிப் பத்தாம் அங்கத்தில் மலர்ந்து மணம் வீசுமாறு நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. விக்கிரமன் என்னும் மண்ணுலக மன்னனுக்கும் ஊர்வசி என்னும் விண்ணுலக மங்கைக்குமிடையே நிகழும் காதலைக் காட்டும் விக்கிரமோர்வசீயம் என்னும் காளிதாசனின் நாடகத்தைக் காட்டிலும் நடுத்தர மக்களின் நடைமுறைக் காதலைக் காட்டும் இந்நாடகம் இயற்கையாயிருக்கிறது. மங்கல முடிவைத்தவிரச்சாவு, கொலை, போர் போன்ற துன்ப நிகழ்ச்சிகள் நேரடியாக மேடையில் நடித்துக் காட்டப்பெறுதல் கூடாது என்பது வடமொழி நாடக மரபு. இம்மரபைக் கூடியமட்டிலும் போற்றி வடமொழியில் யாரும் துன்பியல் (Tragedy) நாடகத்தைப் படைக்க