£6 மண்ணியல் சிறுதேர் அவர்கள் அனுமதிக்கவில்லை. இதற்குரிய முக்கியமான காரணங்களுள் ஒன்றைக் கண்டு மேலே செல்வோம். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த சேக்ஸ்பியர் பதிப்பாளரான ஜான் டோவர் வில்சனால் உலக இலக்கியங்களில் மிக மிகச்சிறந்த நாடகங்கள் என்று குறிப்பிடப்படும் ஹாம்லெட், ஒதெல்லோ, மாக்பெத், மன்னன் லியர் ஆகிய நான்கும் துன்பியல் நாடகங்களே. இவற்றுள் மன்னன் லியர் என்னும் நாடகம் 'சேக்ஸ்பியர் நாளில் நடிக்கப்பட்டு ரசிக்கப்பட்டபோதிலும் பின்னாளில் மேடைக்குப் பொருத்தமில்லாததாகக் கருதப்பட்டது” என்றும் இந்நாடகம் சித்திரிக்கும் அளவுகடந்ததுன்பத்தை, மகிழ்ச்சியை நாடி நாடகம் பார்க்க வரும் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது அதற்குரிய முக்கிய காரணம் என்றும் பேராசிரியர் வ. சு. தண்டபாணி குறிப்பிட்டுள்ளார்."
- But beyond recognizing the tragic element as an essential factor in a drama, they were not willing to accede to the drama resulting in a tragedy.
- K. Chandrasekharan and V. H. Subramania Sastri. Sanskrit Literature, P. 165
- ...... மற்றொன்று, இந்நாடகம் சித்தரிக்கும் துன்பம் சகிக்க
வொண்ணாதது. நாடகம் பார்ப்போர் இந்தப் பெரியதுக்கத்தைத் தாங்க மாட்டார்கள், பார்க்கவும் விரும்பார்கள் என்பது, உதாரணமாக அந்தக் கடைசிக் காr-லியர் தன் இறந்த மகளின் சவத்தைக் கையிலேந்தி தடுமாறித் தடுமாறி, அவளிறந்து போகவில்லை, இன்னும் உயிரோடி ருக்கிறாள் என்ற சங்கல்பம் செய்துகொண்டு, 'அவள் உதடுகள் அசைகின்றன, என்னுடன் மெதுவாக, மிருதுவாகப் பேசுகிறாள்' என்று சித்தாந்தப்படுத்திக்கொண்டு, அந்தக் கற்பனை மகிழ்ச்சியில் தன் கிழ இருதயம் உடைய, மாண்டுபோகும் காr உல்லாசம் தேடிப்போகும் நண்பர்கள் விரும்பார் என்ற காரணம்... ...பேராசிரியர் வ.சு.தண்டபாணி ஏ. சீனிவாச ஐயங்கார் மொழிபெயர்த்த மன்னன் லியர் முகவுரை, ப.W.