பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு £7 பேராசிரியர் காட்டும் இக்காரணம்தான் இந்திய நாட்டார் துன்பியலைத் தீண்டாமைக்கு முதற்காரணம். நாடி நரம்புகள் சோர்ந்து, வாடி வருந்தி, அரங்கத்தை நாடிவரும் மக்களுக்குப் புத்துணர்வளிக்கும் (பொழுதுபோக்கு) கலையாக நாடகத்தைப் பரதமுனிவன் கருதுவது இந்திய மக்களின் இன்பியல் நாட்டத்தை இலை மறைக்காத காயாகக் காட்டுகிறதல்லவா? நாடகத்தைக் கண்டு இதயத்தில் நம்பிக்கையும் இதழில் புன்னகையும் கொள்ளவரும் மக்கள் கன்னத்தில் கண்ணிரால் கோடுபோட்டுச் செல்ல விரும்புவார்களா? எனவேதான் ஆதிகாலத்து இந்திய நாடகங்கள் எல்லாம் இன்பியலாக (Comedy) அமைந்துள்ளன. மிருச்சகடிகம்அல்லது மண்ணியல் சிறுதேர் வடமொழி நாடக மரபைச் சில இடங்களில் விட்டு விலகியிருந்தாலுங் கூட நாடகம் இன்பமாய் நிறைவுறவேண்டும் என்னும் கோட்டைவிட்டுத் தாண்டவில்லை. நாடகத்தினிடையே துன்பச் சுவையையும் துன்பச் சூழ்நிலையையும் தோற்றுவித்ததோடு 'வசந்தசேனை துன்பநிலை என்று ஒரங்கத்திற்குத் தலைப்பும் வைத்த ஆசிரியர், நினைத் திருந்தால் துன்பியலாகவே இந்நாடகத்தை முடித்திருக்க முடியும். அவ்வாறு முடிக்காமல் 'சோக நிகழ்ச்சியின் உச்ச கட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்று இறுதியில் மங்களமாக முடித்திருப்பது ஆசிரியரின் இந்தியப் பண்பாட்டைக் காட்டுகிறது" "ஒருவேளை துன்பியலாக

  • Drama shall be a comfort, an amusement and a refereshment to

all those that are grieved, miserable of weary. --Bharata, Natya Sastra.

  • பெ. திருஞானசம்பந்தம்,வடமொழி இலக்கியச்சோலை. ப.13.