பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A8 மண்ணியல் சிறுதேர் முடித்திருப்பாரேயானால், தான் உருவாக்கிய சிக்கலைத் தீர்க்கத் திறனில்லாமல் - வேறு வழியில்லாமல். துன்பியலாக முடித்துவிட்டார் ஆசிரியர் என்று யாரேனும் குறை கூறவும் வாய்ப்புண்டு.” ஆதலால் வாழ்த்தோடு தொடங்கி "...இன்பம்மிகுவித்தெங்கும் பான்மை தரு திருவினொடு தருமம் பற்றிப் பகைமை யொழித் தரசர் நிலம் பரித்து வாழ்க" என்று பரத வாக்கியத்தோடு நிறைவுறுகிறது, மண்ணியல் சிறுதேர். இன்பியலாக மட்டுமல்லாமல் நடுத்தர மக்கள் பற்றிய @girl?uajirscyth (Middle Class Comedy) oldsåågsø மண்ணியல் சிறுதேர் 'பிரகரணம் என்னும் நாடக வகையின்பாற்படும். அது பாவலனால் கற்பிக்கப்பட்ட கதையையும், பூதல நிகழ்ச்சிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும். அதில் வரும் தலைவன், அமைச்சன், அந்தணன், வணிகன் என்னும் மூவருள் ஒருவனாய்த் தீரசாந்தனாய்த் திகழவேண்டும். தலைவி குலமகளாகவோ விலைமகளாகவோ இருக்கலாம். இருவரும் வருவார்களானால் அந்நாடகம் சங்கீர்ணப் பிரகரணம் எனப்படும். மண்ணியல் சிறுதேர் சங்கீர்ணப் பிரகரணம் என்பதைக் கதையைப் படித்த மாத்திரத்தில் கண்டுகொள்ளலாம்.

Tragedy in the dramatic art is the result of the incapacity of the dramatist to find a solution to a situation which he himself has created.

--Dr. S. Kashinath Rao, Tragedy and Sanskrit Drama, The Modern Review, September, 1967.