பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு -- 49 நாடகக் கதைப் போக்கு தொடக்கம் முதல் இறுதி வரை முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, (விமர்சம்) துய்த்தல் (நிர்வகனம்) என்னும் ஐந்து சந்திகளோடு (இணைப்புக்கள்) கூடியதாக இருத்தல் வேண்டும்: முகம் என்பது நாடகச் செயலின் தொடக்கம். பிரதிமுகம், செயலின் வளர்ச்சி. கருப்பம், நாடகத்தின் நோக்கம் நிறைவேறுவதற்கு உள்ள தடைகளால் வரும் செயல் தேக்கம். விளைவு என்பது நாடகத்தின் நோக்கத்தால் உண்டாகும் நெருக்கடி; இதில் நாடக நிகழ்ச்சிகள் உச்சநிலை அடையும். இறுதியில் நோக்கம் நிறைவேறும். இது துய்த்தல் எனப்படும். இவ்வைந்து சந்திகளும் மண்ணியல் சிறுதேரில் அமைந்துள்ள விதத்தை விபுலானந்த அடிகளார் சுட்டிக்காட்டியுள்ளார்: "அணி கலன் அடைக்கலம்' 'சூதர் நிலை' 'கன்னமிடல்' என்னும் மூன்று அங்கமும் முகமாகச் “சருவிலகன்பேறு' "புயன்மறைப்பு' என்னும் இரண்டங்கமும் பிரதிமுகமாக அமைந்து நின்றன. 'வண்டி மாற்றம்' 'ஆரியகனைக் கோடல்' 'வசந்தசேனை துன்பநிலை' என்னும் மூன்றங்கமும் கருப்பம் என்னும் மூன்றாஞ் சந்தியாவன. 'வழக்காராய்ச்சி'யும் 'தொகுத்துக்கூறல்' என்னும் பத்தாம் அங்கத்தில் வசந்தசேனை தோற்றுதற்கு f இவை, மேனாட்டார் கூறும் ஐந்து சந்திகளைப் பெரும்பாலும் ஒத்துள்ளன. அவை:- - Exposition, Complication, (Rising Action) Climax, (Crisis) Denouement, (Falling Action) Solution. 女 ஐவகைச்சந்திக்கு அடியார்க்கு நல்லார்செய்தஅழகிய விளக்கத்தைச் சிலம்பின் அரங்கேற்று காதை உரைப்பகுதியில் காண்க.