龙 மண்ணியல் சிறுதேர் தோன்றுவான். நாடகம் வெற்றியடைய அவையோரின் ஆதரவும் பாராட்டும் தேவை. ஆதலால் அவையோரைத் தங்கள் பக்கம் இழுக்கும் விதத்தில் வணங்குவதும் :புகழ்வதும் நாடகச் சூத்திரதாரர்களுக்குரிய பழக்கம். 'கற்றறிந்தோர்', 'உயர்ந்தோர்', 'கலைச்சுவைமிக்கோர்' என்று அவையோரைப் புகழ்வர். 'அறிவாளிகள் நல்லதெனக் கூறவேண்டும். அதுவரை என் நாடக ஞானத்தைத் சிறந்ததெனக் கருதமாட்டேன்' என்று சாகுந்தல நாடகச் சூத்திரதாரன் அவையோரைப் புகழ் கிறான்; கவர்கிறான். இன்னும் ஒருபடி மேலே சென்று, இரத்தினாவளி நாடகச் சூத்திரதாரன், “இந்நாடகம்' சுவைஞர்களின் 'நெஞ்சையள்ளும்' என்று நிச்சயம் நம்புகிறேன். காரணம், இந்நாடகத்தை இயற்றிய ஹர்சர் தேர்ந்த கவிஞர்; இந்த அவை தகுதி மிகுதியுடையது; கதை கவர்ச்சிக்குரியது; நாங்களோ, நடிகர் திலகங்கள்' என்பான். மண்ணியல் சிறுதேரின் சூத்திரதாரன் சுருக்க மாக அவையோரைப் பெரியோர்கள் என்று விளித்து வணக்கஞ்செய்து நாடகத்தை நடத்த முயல்கிறான். சூத்திரதாரன்தான் வடமொழி நாடகங்களில் வரும் முதல் பாத்திரம் எனலாம். சூத்திரதாரன் நாடகம் பற்றிய
- ஒரு காலத்தில் பொம்மலாட்டத்தை (கயிற்றைக் கையில் வைத்துக்கொண்டு) இயக்கியவன் சூத்திரதாரன் எனப்பட்டான். அவன், நாடகத்தை இயக்கத் தொடங்கிய பின்னரும் சூத்திரதாரன் என்றே அழைக்கப்பட்டான்போலும்.
Sutra, a threa; hence Sutradhara means one who holds the thread or the agent behind the puppet-shows. --R.V. Jagirdar, Drama in Skt. Lit. P.37.
- As a matter of fact, in all the Sanskrit plays available, the first charactar to appear on the stage is Sutradhara. -
--R.V. Jagirdar, Drama in Skt. Lit. 45.