பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 53 பல விவரங்களையும் தெரிந்திருக்கவேண்டும்; பல சாதியாருடைய நடையுடை பாவனைகளை அறிந்தவனா யிருக்கவேண்டும்; அப்போதுதான் அவன் நாடகத்தைச் செம்மையாக இயக்கமுடியும் என்று வடமொழியாளர் கருதுவர். சாகுந்தலம் போன்ற பலருக்கும் தெரிந்த மூலக் கதையுள்ள நாடகத்தில் சூத்திரதாரனுக்கு அதிக வேலை கிடையாது; நாடகத்தைத் தொடக்கி வைக்கும் வேலை மட்டும்தான் உண்டு. மண்ணியல் சிறுதேரோ கவிஞரின் கற்பனையில் பிறந்த ஒரு பிரகரண நாடகம். எனவே நாடகத்தைத் தொடக்கி வைப்பதுடன் கணிதப் பொருளை யும் போக்கையும் அவையோர்க்குத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லவேண்டிய பொறுப்பும் சூத்திரதாரனைச் சேர்கிறது. இதில் வரும் சூத்திரத்ாரன் அப்பொறுப்பை ஏற்றுத் தன் பணியைச் செம்மையாகச் செய்கிறான்; நாடக ஆசிரியரின் வரலாற்றையும் சொல்கிறான். சூத்திரதாரன் (அவன் மனைவியாகிய)நடி ஆகிய இருவர்க்கிடையே நடைபெறும் உரையாடல் சுவையாயிருக்கிறது; நாடகத்தைப் பார்க்கவேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது. சூத்திரதாரன் பிராகிருதத்தில் பேசுகிறான். அவன் பேச்சில் பாலகன், சாருதத்தன், மைத்திரேயன், சூர்ண விருத்தன் ஆகிய நாடக மாந்தர்கள் சுட்டப்படுகிறார்கள். சூத்திரதாரன் சூர்ண விருத்தனைப் பழிப்பதைப்போல, முன்னுரையிலேயே அரசன் பாலகனைச் சினமிக்க பாலகன் என்று அறிமுகப் f இதனை விரிவாக ப.சம்பந்த முதலியாரின் நாடகத் தமிழ்' என்னும் நூலில் (பக். 41-42) காண்க.