- ஒரு மதிப்பீடு 65 னாகவும் உருவகப்படுத்தினானோ என்னவோ? சாருதத் தனுக்கோ இருவரும் இரத்தினமாலைகளே! இருவரின் உறுதியன்பையும் போற்றுகிறான். மூன்றாம் அங்கத்தில் முதன் முதலாகத் தூதையை புகழொடு தோன்றச் செய்கிறார் ஆசிரியர். அவள், "நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச் சிலம்புள கொண்ம்' என்ற அடிகளாரின் வணக்கத்திற்குரிய மாபெரும் பத்தினியை நினைவூட்டுகிறாள் அல்லவா? IV சருவிலகன் பேறு மூன்றாம் அங்கத்தின் தொடர்ச்சியான இவ்வங்க நிகழ்ச்சிகள் வசந்தசேனை வீட்டில் நடக்கின்றன. இவ்வங்கத்திலும் சருவிலகன் சிறப்பான பங்கு பெறுகிறான். அவன், தன் வாழ்வில் சிறப்பான பங்கு பெறவிருக்கும் மதணிகையை இதில்தான் பெறுகிறான். சம்வாககனும் சருவிலகனும் தோன்றும் முதல் அங்கத்தை அடுத்து அமைந்துள்ள மூன்று அங்க நிகழ்ச்சிகள், சாருதத்தன் வசந்தசேனை காதற் கதையான தலைமைப் பொருளை (Main Plot) மறக்க செய்துவிடுகின்றன, நம் கவனத்தைத் திசை திருப்புகின்றன என்று மேலை நாட்டறிஞர் ஒருவர் குறிப்பிடுவதை ஒப்புக்கொள்ள மண்ணியல் சிறுதேருக்கும் சிலம்புக்குமிடையே உள்ள நெருங்கிய ஒற்றுமைகளையும் சில வேற்றுமைகளையும் நாவலர் பாரதியார் வரைந்துள்ள மண்ணியல் சிறுதேரின் ஆராய்ச்சி மதிப்புரையில் கண்டு களிப்புறுக.
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/66
Appearance