உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 மண்ணியல் சிறுதேர் முடியாது. உண்மையில் சம்வாககனும் சருவிலகனும் தோன்றும் கிளைநிகழ்ச்சிகள் (episodes) சாருதத்தன் வசந்தசேனை காதலை வளப்படுத்தவும் பலப்படுத்தவுமே செய்கின்றன. இவ்வங்கத்தில், வசந்தசேனை, தான் அழகொழுக எழுதிய சாருதத்தனின் ஒவியத்தில் கண்களைப் பதிய வைத்திருக்கிறாள். சாருதத்தனிட்ம் தனக்குள்ள ஆழமான காதலைக் காட்டுகிறாள். அப்போது, சகாரன் வண்டி வாசலில் நிற்கிறது, செல்' என்ற தாயின் தூதுரை கேட்டுச் சீறுகிறாள்; சகாரனிடம் தனக்குள்ள ஆழமான வெறுப்பைக் காட்டுகிறாள். தாயின் சுடுசொல்லால் வசந்தசேனைக்கு உள்ளம் மட்டுமின்றி உடலும் வேகிறது போலும்! மதனிகையிடம் விசிறியை எடுத்துவரக் கட்டளை இடுகிறாள். மதனிகை செல்வதற்கும் சருவிலகன் வருவதற்கும் சரியாயிருக்கிறது. இருவரும் சந்தித்து உரையாடுவதை வசந்தசேனை பார்க்கிறாள்; கேட்கிறாள். மதணிகையைக் கள்வனின் காதலி' என்று புரிந்து கொள்கிறாள். களவுப் பொருள் தன்னுடையது என்றும் களவு நிகழ்ந்தது சாருதத்தன் இல்லத்தில் என்றும் அறிந்தபோது வசந்தசேனை மயங்குகிறாள். சாருதத்தன், சருவிலகனால் கொல்லப்பட்டானோ என்று மதனிகை ஐயப்படுகிறாள். 'சாருதத்தன் மேல் இவளுக்கென்ன இவ்வளவு கவலை? என்று அவள்மேல் சருவிலகன் ஐயப்படுகிறான். உடனே கணிகையரை 'ஈமமார் மாலை"

  • But we can't agree with Dr. Ryder when he writes that 'during these episodic acts we almost forget that the main plot concerns the love of Vasantasena and Carudatta."

—Dr. G.V. Devastthali, Introduction to the study of Mr.cchakatika, P. 62,