பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு - 73 V1 வண்டி மாற்றம் 'காவியங்களுள் நாடகம் சிறந்தது; நாடகங்களிலும் சாகுந்தலம் சிறந்தது; சாகுந்தலத்திலும் நான்காம் அங்கம் சிறந்தது... என்பர் வடமொழியாளர். சாகுந்தலத்தின் நான்காம் அங்கத்தைப் போல் மண்ணியல் சிறுதேரின் ஆறாம் அங்கமும் சிறந்து விளங்குகிறது; நாடகத் தலைப்பைத் தழுவிச் செல்கிறது. ஐந்தாம் அங்கத்தின் இறுதியில் கருத்தொருமித்துக் காதலர்கள் இணைந்ததையும் ஈரச்சுவை"யில் நனைந்த தையும் கண்டோம். இனி, வசந்தசேனை வாழ்வைத் தொடங்க வேண்டியதுதான்! அதற்குச் சாருதத்தனின் குடும்பத்தாரின் - குறிப்பாகத் தூதையின் - இசைவைப் பெறவேண்டுமல்லவா? இதிலும் அவள் வெற்றியடைய வேண்டுமல்லவா? இதைத்தான் இவ்வங்கத்தின் முதலிரு காட்சிகள் காட்டுகின்றன. சாருதத்தன் இல்லத்துள் வசந்தசேனை நுழைவது பெரிதல்ல; அவனைச் சார்ந்தோரின் உள்ளத்துள் நுழைவதுதான் பெரிது! அரிது! "எல்லோருடைய நெஞ்சத்தினுள்ளும் நுழைந்துவிட்டீர்கள் என்றும் தாங்கள் வெளிச்செல்லுங்கால் வருந்துவர் என்றும் வசந்தசேனையை நோக்கிச் சேடி கூறுகிறாள். இங்ங்னம் யாவரும் அவளிடம் அன்பு கொள்வதற்குக் காரணம் அவளுடைய குளர்ச்சிமிக்க குணம்தான். சாருதத்தனுக்கும் தூதைக்கும் தான் ஒரு 'பணிப்பெண் என்றுரைக்கும் வசந்தசேனையை யாரும் விரும்புவர்; தூதையோ அதிகம் விரும்புகிறாள். தன் வாழ்வின் இன்பத்தை குறைக்கப் பிறந்தவள் என்று தெரிந்தும் தன் கொழுநனைக் கூடப்