பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - * - மண்ணியல் சிறுதேர் பிறந்தவள் என்று தெரிந்தும் தன் கூடப்பிறந்தவள் என்று வசந்தசேனையை ஏற்கிறாள், தூதை. சாருதத்தன் தந்த இரத்தினமாலையைப் பெருந்தன்மையோடு தூதையிடம் திரும்பக் கொடுக்கிறாள் வசந்தசேனை. அவளோ, இன்னும் பெருந்தன்மையோடு பெற்றுக்கொள்ளாது 'எம் பெருமானே எனக்குச் சிறந்த அணிகலனாவர். என்கிறாள்! ஒரு மனிதன் முழுமையான மனிதன் ஆகவேண்டு மானால் அவன் மூன்றாக வேண்டும் தானும், தன் மனைவியும், குழந்தையும் என்று மூன்றாகவேண்டும் என்று மனு குறிப்பிட்டுள்ளார்: எனவேதான் வடமொழி நாடகங்கள் சிலவற்றில் தலைவன் தலைவியோடு அவர்கள் குழந்தைக்கும் ஒரு சிறப்பிடம் அளிக்கப். பட்டுள்ளது. மண்ணியல் சிறுதேரின் ஆறாம் அங்கத்தில் மண்ணியல் சிறுதேரோடு சாருதத்தனின் பேசும் பொற்சித்திரமான உரோகசேனன் தோன்றுகிறான். சிறிது நேரத்திற்கு முன் வசந்தசேனைதுதையின்தங்கை ஆனாள். இப்போது உரோகசேனனின் தாய் ஆக வேண்டும்; இதிலும் வெற்றி காணவேண்டும். வசந்த சேனை, சாருதத்தனை அடைய மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் ஒரு தவம், ஒரு சத்தியசோதனை ஒவ்வொரு படியாகக் கடந்து உச்சிமலையில் உள்ள ஆண்டவனை அடையும் அடியவன் பாடுதான் அவள் பாடும்! இதோ! பொன் வண்டி வேண்டும் என்று அழுதுகொண்டே உரோக சேனன் வருகிறான். இதோ, வசந்தசேனை அவனைக் காண்கிறாள்; 'மதிமண்டிலம் போல் திகழ்கின்ற

  • "Then only is a man a perfect man", says Manu's code, "when he is three-himself, his wife, and his son."

- Will durant, The story of Civilization I. P. 488.