பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 79 என்று மைத்திரேயனிடம் சாருதத்தன் மொழிந்தவாறு எதிரே வரும் பெளத்தத்துறவியின் தீங்கை விளைவிக்கும்' பார்வையில் படாதவாறு வேறுபாதையில் போகிறான். மண்ணியல் சிறுதேரில் இதுதான் மிகச்சிறிய அங்கம் என்றும் தலைமைக் கதைத் தலைவனும் சார்புக் கதைத் தலைவனும் இதில்தான் சந்திக்கிறார்கள் என்றும் இரண்டு சிறப்புக்களை இவ்வங்கத்தின்கண் ஏற்றிக் கூறலாம். இன்னும் ஏதேனும் கூறவேண்டுமானால் இது ஆறாம் அங்கத்திற்கு அடுத்த அங்கம் என்று கூறலாம். VII வசந்தசேனை துன்பநிலை இவ்வங்கமும் புட்பகரண்டகம்' என்னும் பூஞ் சோலையில் நிகழ்கிறது. இப்பூஞ்சோலையில்தான் வசந்தசேனை என்னும் பூவை வாடவைக்க முயல்கிறான் சகாரன். சகாரன் இதுவரை வெளிச்சமிட்டும், வேடமிட்டும் பொய்ம்மைக் கூத்தாடினான்; பேதைக் கூத்தாடினான். இவ்வங்கத்தில் முழுக்க முழுக்கக் கயமைக் கூத்தாடுகிறான். எடுத்தவுடனேயே துவராடையைத் தூய்மை செய்ய வரும் பெளத்தத் துறவியை அடிக்கிறான். அத்துறவி வேறு யாருமல்லன்; இரண்டாம் அங்கத்தில் வசந்தசேனையிடம் அடைக்கலமாகிச் சூளுரைத்துச் சென்றானே, அச் சம்வாககன்தான். அவனைத்தான் சகாரன் ஒரே அடியிற் கொன்றுவிட வேண்டுமென்று அடிக்கிறான். ஒரு நாயை அடிப்பதற்கும் காரணத்தைச்