பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மண்ணியல் சிறுதேர் சொல்லி அடிக்கவேண்டும் என்பது சகாரதத்துவம் போலும்! எனவேதான் 'யான் சமீபகாலத்தில் துறவி யாயினவன்' என்ற துறவியை “நீ பிறந்தவுடனேயே ஏன் துறவியாக வில்லை?" என்று அடிக்கிறான் விடன் தடுக்கிறான். சகாரன், அத்துறவி தன்னைப் புகழவேண்டும் என்கிறான். புத்த தேவரைப் புகழும் சம்வாககன் கொடு, தலையை' என்னும் கயவனையும் புகழ்ந்து விடுதலை பெறுகிறான். - - - சிறிது நேரத்தில் சகாரன் வண்டி வருகிறது. வண்டியின் உள்ளே இருக்கும் வசந்த சேனைக்கு வலக்கண் துடிக்கின்றது; 'நெஞ்சம் நடுக்கமுறுகின்றது; 'திசைகள் பாழாய்த் தோன்றுகின்றன. எவ்வளவு வேகமாய் வண்டியில் ஏறினானோ அதைக் காட்டிலும் வேகமாய் இறங்கிப் பேயோ, பெண்ணோ வண்டியுள் இருப்பதாக விடனிடம் கூறுகிறான். வசந்தசேனை, பகைவன் கையில் சிக்கப் போகிறோமே என்று பதைக்கிறாள். தன் வரவு 'களர் நிலத்தின் விதைத்த வித்துக் கூட்டம் போலப் பயனிலதாயிற்று' என்று வருந்துகிறாள். அப்போது வண்டியுள் ஏறிய விடனிடம் அடைக்கலமாகிறாள். விடனால் சகாரனை நல்லவனாய் மாற்றமுடியாததைப் போலவே (இப்போது) ஏமாற்றவும் முடியவில்லை. ஏதோ ஒரு திட்டமிட்டு 'வசந்தசேனை தங்களைக் கூடுதற்கு வந்திருக்கிறாள்" என்கிறான். இந்த வார்த்தையை வசந்தசேனையால் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? இங்கே, சேக்ஸ்பியரின் ஒதெல்லோ (Othello) நாடகக் காட்சி ஒன்றை ஒப்பிட்டுக்காட்ட விழைகிறது. என் எழுதுகோல், இயாகோ என்னும் கயவனின் வஞ்சனைக்கு அடிமையாகி மதியிழந்து, நிம்மதியிழந்து மாசில்லா மதிபோன்ற தன் மனைவி டெஸ்டிமோனாவைப் 'பரத்தை என்று பழித்துரைத்துச் செல்கிறான்;