உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 83 வசந்தசேனையோ "சாருதத்தருக்கு வணக்கம்" என்கிறாள். சகாரன், மேலும் கழுத்தை நெரிக்க மேலும் மேலும் 'மாட்சிமிக்க சாருதத்தருக்கு வணக்கம்" (நமோ ஆரிய சாருதத்தாய) என்கிறாள். மண்ணில் வீழ்கிறாள். அவள் உடலைச் சருகுகளால் மூடிச் சகாரன் ஒடுகிறான். பாவம், வசந்தசேனை இன்பத்தேர் உற்சவம் காணவா வந்தாள்; சவம் ஆக வந்தாள் என்று வருந்துகிறோம். எனினும் அஞ்ச வேண்டியதில்லை. அவள் இதயத்தின் ஈரம் அவளைக் காப்பாற்றாமல் விடுமா? இதோ, சருகுகளால் மூடிய வசந்தசேனையின் மேனி வெளிப்படுகிறது: பெளத்தத் துறவி சம்வாககனின் சீவர ஆடையின் ஈரம் படுகிறது. நல்லவேளை, அவள் பிழைத்துக்கொள்கிறாள். சம்வாககனோடு பெளத்த மடத்திற்குச் செல்கிறாள். இப்போது வசந்தசேனையைப் பற்றிய நம் கவலை விட்டது. ஆனால் சகாரனால் சாருதத்தனுக்கு என்ன நேருமோ என்ற கவலை அதிகமாகிறது. இவ்வங்கத்தில் சகாரனின் இற்ற வில்லைப்போன்ற குணத்தையும் வெண்மதியற்ற அல்லைபோன்ற மனத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். 'உன் நெஞ்சத்துள் இருக்கின்றவனையும் உன்னையும் ஒருங்கே கொல்லுகின்றேன்' என்று வசந்த சேனையிடம் கூறும் போது சகாரனின் உண்மையான தோற்றம் தெரிகிறது. சகாரன் வசந்தசேனையைக் கொல்லத் தூண்டும்போது, 'அடுத்த பிறப்பில் என்னை அடையும் துன்ப ஆற்றினை எந்தத் தோணிகொண்டு கடப்பேன்' என்கிறான் விடன். உடனே 'யான் உனக்குத் தோணி தருவேன்' என்கிறான் சகாரன். இது, உலக இலக்கியங்களிலேயே மிகச் சிறந்த நகைமொழிதான். எனினும் இப்போது இதை நம்மால் பெரிதும் அனுபவிக்க இயலவில்லை. இப்போது அவனுடைய வேடிக்கைப் பேச்சு ஒவ்வொன்றும்