பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மண்ணியல் சிறுதேர் அவனுடைய கொடுமைக் கூத்துக்குப் பொருந்தும் அசுர கானமாகவே தென்படுகிறது. இவ்வங்கத்தில், சாருதத்தனையும் சகாரனையும் வசந்தசேனை தன் கண்முன் நிறுத்தி 'மாமரத்தைச் சார்ந்த யான் புரச மரத்தை ஏற்றுக்கொள்ளேன்' என்பது அழகாயிருக்கிறது. வசந்தசேனை இறந்துவிட்டாள் என்று எண்ணி விடன் பாடும் கையறுநிலைக் கவிதை கண்ணிர் மல்கச் செய்கிறது. முன்பு, கை (ஒழுக்கம்) மாறுபட்டு வருந்தியபோது தன்னைக் காப்பாற்றிய வசந்தசேனைக்குச் சம்வாககன் இங்கே கைம்மாறு செய்வது பொருத்தமா யுள்ளது. IX வழக்காராய்ச்சி 'சிலப்பதிகாரத்தில் வரும் வழக்குரை காதை நாடகப் பாங்கிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு" என்னும் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரின் கூற்று மண்ணியல் சிறுதேரின் வழக்காராய்ச்சி என்னும் இவ்வங்கத்திற்கும் அப்படியே பொருந்தும். சகாரன் பாவக் குழியைத் தோண்ட முழு மூச்சாய்ப் பாடுபடுவதும்", அறவோனாகிய சாருதத்தன் குற்றவாளியாவதும், படிப்படியாக நம்முடைய வேட்க்ை உணர்வு மிகுந்து உச்சநிலை அடைவதும் இவ்வங்கத்தில்தான். வழக்கு மன்றத்தில் ஒரே நெடுங்காட்சியாக இவ்வங்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தேவையான நாடக மாந்தர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படும்போது ஏற்படும் + தெ. பொ. மீ, நாடகக் காப்பியங்கள், ப. 34.