90 மண்ணியல் சிறுதேர் வில்லை என்று சொல்ல முடியாது என்றும் சூழ்நிலை சாருதத்தனைக் குற்றவாளியாக்கும்போது அவரால் என்ன செய்ய முடியும் என்றும் இயம்பலாம் சாருதத்தன், சகாரன் போன்ற கொடியரால் 'நல்லறம் அன்னவர் அழிந்தனர் அழிக்கின்றார் பலர்' என்று சொல்வதிலிருந்து நீதிபதி இன்னும் வழக்கை நன்கு ஆராய்ந்திருக்கலாமே என்று தோன்றுகிறது. 'வசந்தசேனையைக் கொலை செய்யுங் கால் யான் இவனைக் கண்டேன்' என்று சகாரனாலும் கூறப்பட்டிலது. "வசந்தசேனை வண்டியில் ஏறியிருக் கின்றாள்' என்று சந்தனகன் கூற “அதனை நேரிற்காணும் விருப்பினனாய் அவ்வண்டியில் ஏறிய என்னை அச்சந்தனகன் அடித்து வீழ்த்தினான்' என்னும் வீரகன் சொல்லால் அவனுக்குச் சந்தனகன் உரையில் அவநம்பிக்கையுண்டாயிற்று என்பதை உய்த்துணர்ந்து கொள்ளாமல் வசந்தசேனை சாருதத்தன் வண்டியில் ஏறிச் சென்றாள் என்றும் துணியப்பட்டது. இறந்து கிடக்கும் ஒரு பெண்ணுடலைக் கண்டு கூறிய அளவில் வசந்தசேனையின் கொலையும் துணியப்பட்டது. 'கொன்றுவிட்டான்; யான் இல்லை' என்று சகாரன் முதலிற் கூறிப்பின் வேறுவிதம்ாக அச்சொல்லை மாற்றியதில் ஐயப்பாடும் ஏற்பட்டிலது. இவை முதலிய எல்லாம் 'நீதிபதிகளால் ஆராய்ந்தறியற் பாலன என்று பண்டிதமணி குறிப்பிடுவதிலிருந்து நீதிபதி தன் கடமையில் தவறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. சாருதத்தனுக்கு, நீதிபதியைக் காட்டிலும் அரசன் பாலகன்தான் ஆராய்சியில்லாத செய்கையுடயவனாய்த் தென்படுகிறான். சான்று முதலிய ஆராய்ச்சிகளால் துணிதற்கு அரிய வழக்கை நீரில் முழுகல், தீயிற்புகுதல் முதலிய தெய்வீகங்களால் (கடுஞ்சோதனைகளால்) ஆராய்ந்திருக்கலாமாம். அங்ங்னம் செய்யாமல் மனு நீதியைப் பின்பற்றி நாடு கடத்தாமல் கழுவில் ஏற்றுமாறு
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/91
Appearance