பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு §I ஆணை பிறப்பிக்கும் அரசன்மீது ஆத்திரப்படுகிறான் சாருதத்தன். எனவே, அவனுடைய குளிர்ந்த உள்ளத்தி லிருந்து நரகத்தில் மன்னன் வீழ்க என்னும் கொதிக்கும் வார்த்தை வருகிறது. சுருக்கச்சொன்னால், வழக்கு நன்றாக 5-555; நீதிதான் முடமானது. X தொகுத்துரைத்தல் உச்சயினி நகரத்தைக் கலை அலங்காரம் செய்த சாருதத் தன் இப்போது கொலை அலங்காரம் செய்யப்படுகிறான். ஊருக்கு உதவிய அவனுக்கு இப்போது அரிசிப் பொடியும் அலரி மாலையும் செந்நிற ஆடையும் அலங்காரம் செய்து கொள்ள உதவுகின்றன. அலங்காரம் முடிந்து அவன் அரசனின் அதிகாரம் செல்லும் வீதிகளில் சண்டாளர்களால் (கொலைஞர்களால்) அழைத்து வரப்படுகிறான். வீதியெல்லாம் மக்கள் வெள்ளம் மக்கள் விழியெல்லாம் கண்ணிர் வெள்ளம் அழுகிறார்கள்; ஆடையால் முகத்தை மறைக்கிறார்கள்; 'பொன்னால் இயலாப் பூண் போகின்றதின்றே காண்; என்னே நகரின் எழில்' என்று புலம்புகிறார்கள். பறை அடிக்கப்படுகிறது; பாலகனின் ஆணை படிக்கப்படுகிறது. பறையொலி யையும் பழிமொழியையும் கேட்க நடுக்கமுற்றுச் செவிகளைப் பொத்திக் கொள்கிறான் சாருதத்தன். பின்னர் சண்டாளர்கள் சாருதத்தனுக்காக இரக்கங் கொள்வதும், சாருதத்தன் சண்டாளர்களிடத்தில் தன் மைந்தன் முகத்தைக்