பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் II

இனிப் புறம் பற்றிய இரு செய்திகளைக் காண்போம். புறத்துறையினும் அறத்துறை பற்றிய நாடு தமிழ்நாடு. மறப்போரேயாயினும் அறம் வழுவா. அறப்போர் ஆற்றிய அரசர் திறலைப் புறநானூறு புகலும். ஒரு நாட்டின் மீது படையெடுப்பதற்கு முன்னால் அந்நாட்டிலுள்ள பசுக்களும் , அந்தணர்களும், பெண்களும், நோயாளிகளும், கடிமணம் முடிந்தும் மக்கட்பேறு வா ய் க் கா த நிலையிலுள்ள மணமக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுங்கள் என அறிவித்துவிட்டே போர் தொடங்கப் பெற்ற தாக அறியவருகிறோம்.

“ஆவும் ஆகிகர்ப் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன் போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்.அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என அறத்தாறு நுவலும் பூட்கை மறம்” பசுக்கள் அன்று செல்வத்தை அளக்கும் அளவுகோலாகத் திகழ்ந்தன. ஒரு பசுவால் வரும் வருவாய் கொண்டு வாழும் வாழ்க்கை சிறப்பற்ற வாழ்க்கையாக ஒரான் வங்கிச் சீரில் வாழ்க்கை'30 எனப்பட்டது. எனவே பகைநாட்டு மன்னனின் பசுக்களைக் கவர்ந்து வந்துவிடுதல் வெட்சி எனப்பட்டது. அப் பசுக்கள் தன் நாட்டுக்கு வந்துவிட்டால் பகைவன் நாட்டுச் செல்வம் தன் நாட்டிற்கு வந்துவிட்டதோடு அல்லாமல், பொது அறம் நோக்கிக் காக்கப்படவேண்டிய பசுக்களைக் காத்தவாறும் ஆயிற்று. சாலையோரத்தில் வழிச் செல்வோர் நீர்விடாய் தணிக்கும் பொருட்டு நடப்பட்ட நெல்லிமர நெல்லிக்காய் அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்’ எனப்பட்டது ஈண்டுக் கருதத்தக்கது.

அடுத்து, தமிழர் வீரம் விளங்கி நின்ற மரபினர் என்பதற்கு ஒரு காட்டுத் தருவல். பகைநாட்டு அரணைச் சுற்றி முற்றுகை; பலநாள் அம் முற்றுகை நீடித்தது. எயில்