பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

காத்தனர் நொச்சியார்.

அம்மதில் வளைத்து நின்றனர் உழிஞையார்.

உழிஞையர்க்கு ஒருநாள் பொறுமை எல்லை கடந்தது. சினம் மூண்டது; ஊக்கம் மிகுந்தது. அடுத்த வேளைக்குரிய சமையலை நிறுத்தினர். சமையலுக்குப் பயன்படும் அனைத்துப் பொருள்களையும் கருவிகளையும் மூடையாகக் கட்டி இந்தப் பக்கத்திலிருந்து கோட்டையின் உட்பக்கம் எறிந்தனர். அடுத்தவேளை உணவு மதில் முற்றுகையை முடித்து, மதில் காக்கும் நொச்சியரை வென்று, கோட்டையின் உட்புகுந்த பின்னரே என்றனர்.

‘மண்புனை யிஞ்சி மதில் கடந் தல்லது

உண்குவ மல்லேம் புகாவென’ உள உரத்தோடு நின்ற உயர்மறவர்களைப் பதிற்றுப்பத்து காட்டும்.

இனி இயற்கையின் பின்னணியில் துலங்கிய பழந்தமிழர் வாழ்வினை இரண்டு எடுத்துக்காட்டுகள்ால் காண்போம்.

வரையாது வந்து ஒழுகுகின்றான் தலைமகன் ஒருவன். தலைமகள் பேதுற்றாள்; மெலிந்தாள்; மேனி பசந்தாள்: நெற்றி ஒளி இழந்தாள். ஆயினும் அவளுக்கு ஒர் ஆறுதல். தலைமகன் நாட்டில் எழிலும் ஏற்றமும் உயர்தோற்றமும் கொண்டு விளங்கிய மலையைப் பார்த்தாள்; தலைமகனைப் பார்த்தது போன்ற ஆறுதலைப் பெற்றாள். வரியும் வனப்பும் வண்ணம் வாடிய அவள் மேனி பண்டுபோல் துலக்கமுற்றது; நெற்றி ஒளி நிறைந்தது.

is i H. H. H. H. H. H. H. H. H. H. H. .............. அவர் காட்டுக் குன்றம் நோக்கினேன் தோழி பண்டை யற்றே கண்டிசின் நுதலே’

என்றாள். இது சிறுபிள்ளைத்தனமும் அன்று: வேடிக்கை யும் அன்று. இறைவன் படைத்த இயற்கையில்தான் மனித மனம் அமைதிபெற முடியும் என்பது மேனாட்டினரும் இன்று தெளிந்து போற்றும் உண்மையாகும்.