பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

கோடன், ஒய்மான் வில்லியாதன் கரும்பனுார் கிழான் முதலிய வள்ளியோர்களைப் பாராட்டி உரைத்துள்ளார்.

பாடல் மரபு

ஒரு பாடல் நல்லியக் கோடனையும் , ஒரு பாடல்ஒய்மான் நல்லியக் கோடனின் வழித்தோன்றலாய ஒய்மான் வில்லியாதனையும் இரண்டு பாடல்கள்

கரும்பனுார் கிழானையும் சிறப்பித்து உரைக்கின்றன, திணை வழி நோக்கும்போது நான்கு பாடல்களும் பாடாண்திணைப் பாடல்களாகவே காணப்படுகின்றன. துறைவழி நின்று பார்க்கும்போது ஒய்மான் நல்லியக் கோடனை இயன்மொழி வாழ்த்துத் துறையிலும் ஒய்மான் வில்லியாதனைப் பரிசில் துறையிலும் கரும்பனுார் கிழானை இயன்மொழி வாழ்த்து. கடைநிலை ஆகிய துறைகளிலும் வைத்துப் பாடுவதாகக் காணப்படுகின்றன. கூற்றுவகையான் கானும்போது ஒய்மான் நல்லியக்கோடனைக் கிணைப் பொருநன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாடுகின்றார். ஒய்மான் வில்வியாதனை, கிணைப் பொருநன் ஒருவன் அவன் சிறப்புகளைக் கூறக்கேட்டுத் தான் வந்ததாகப் பாடுகின் றார். கரும்பனூர் கிழானைப் பாணரும் கினைவரும் ஆகிய சுற்றத்தாருடன் சென்று காண்கின்றார். மற்றொரு பாடலில் கரும்பனுரர் கிழானைக் கிணைப் பொருநன் கூற்றில் வைத்துப் பாடுகின்றார். நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களில் கிணைப் பொருநன் குரலினையும் புலவர் இரண்டு பாடல் களில் புலவர் குரலினையும் கேட்கின்றோம்.

திணை விளக்கம்

பாடப்பட்ட ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது பாடாண்திணை. அதாவது பாடப்படும் மன்னனின் இசை, வன்மை, வண்மை ஆகியவற்றைக் கிளந்து ஒதுவது பாடாண்திணை.