பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் 47

ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்

அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று

என இலக்கணம் வகுக்கின்றது புறப்பொருள் வெண்பா மாலை. இந்த இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்

கின்றன. புறத்திணை நன்னாகனார் பாடல்கள்.

துறை விளக்கம்

புறத்திணை நன்னாகனார் பாடல்கள் நான்கில் மூன்று துறைகள் காணப்படுகின்றன. அவை இயன்மொழி வாழ்த்து, பரிசில் துறை கடைநிலை என்பன. இவற்றுள் இயன்மொழி வாழ்த்தாவது ‘இன்ன வள்ளல் இன்ன பொருளை நல்கினான். அன்னோன் போல நீயும் எமக்கு வரையாது வரைக என இரவலன் புரவலனுக்குக் கூறியது ஆகும். இதனை,

இன்னோர் இன்னவை கொடுத்தார் நீயும்

அன்னோர் போல அவை எமக் கீயென

என்னோரும் அறிய எடுத்துரைத் தன்று

என்ற புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவினால் தெளியலாம். இவையன்றி மன்னவன் இயல்பினைப் புகழ்ந்து கூறலும் இயன்மொழி வாழ்த்து என்பதனை,

மயிலறு ஒர்த்தி மாண்தேர் மன்னவன் இயல்பே மொழியினும் அத்துறை யாகும்

என்றதனால் அறியலாம், தொல்காப்பியனார் இதனை

அடுத்துார்ந் தேத்தி இயல் மொழி வாழ்த்து’ எனக் குறிக் கின்றார் ■

ஒய்மான் வில்லியாதனைப் பரிசில் துறையில் வைத்துப் பாடுகின்றார். பரிசில் துறையாவது இரவலன், வேந்தன்