பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைத்திணை 83

முடிவுரை

பொதுவாகத் தமிழில் அமைந்த முல்லைத் திணைப் பாடல்கள் அனைத்தும் மாறிப்புக்கு இதயம் எய்திய காதலர் இருவரின் கருத்தொருமித்த வாழ்வின் பிரதிபலிப்பு களாகக் காணப்படுகின்றன. முல்லை நிலத்துக் கார்காலமும் மாலைக்காலமும் உணர்ந்து பாடப்படுவதால் அதில் உயர்வு நவிற்சி சிறிதும் இல்லை. நிலமும் பொழுதும் மரமும் மலரும் புள்ளும் விலங்கும் பிறவும் பாடலின் பின்னணியாகத் துலங்கப்பாட்டின் உயிர்ப் பொருளாகக் காதலர் இருவரின் உள்ள நிலை விளங்குகிறது. இயற்கை உலகமும் மனித உலகமும் இயைந்த ஒர் இயைபை இப்பாடல்கள் உணர்த்தி நிற்கின்றன.