பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.5 திருக்குறளும் சமுதாயமும்

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் சிறந்த நீதி இலக்கியமாகத் திகழ்கின்றது. பல நூற்றாண்டு களுக்கு முன்னர்த் தோன்றிய நூலாயினும் நாள்தோறும் அதன் புகழும் பயனும் பெருகி வருகின்றது. திருக்குறளின் இந்தப் பெருமைக்கும் சிறப்புக்கும் காரணங்கள் பலவாகும். எளிய, இனிய எல்லாரும் பின்பற்றத்தக்க அறநெறிக்கருத்து களைக் கூறுவது. நாடு, மொழி, சமயம், இனம் ஆகிய வற்றைக் கடந்து, பொதுநிலையில் அமைந்திருப்பது, பல்கிப் பெருகிய பல உரைகளைப் பெற்றிருப்பது. இன்னோரன்ன இயல்புகள் திருக்குறளுக்குப் பெரும் சிறப்பை நல்கியுள்ளன. அவ்வகையில் ஏறத்தாழப் பதினெட்டு நூற்றாண்டுகட்கு முன்னர்த் தோன்றிய திருக்குறள், தனது அறம் உரைக்கும் நோக்கத்திற்கேற்பச் சமூக நல்வாழ்விற்கான கருத்துகளின் பெட்டகமாக விளங்குகின்றது. காலப் பொதுவான கருத்து J5 Q/TГT&5 அவற்றில் .ெ ப ரு ம் ப ா ன் ைம அமைந் துள்ளதால் அவை இன்றும் மனிதகுலம் உள்ளவரை பயன் படும்; பின்பற்றத்தக்க அறநெறிகளாக அமையும். மக்களினம் வாழும் வரை திருக்குறள் நின்றுநிலைத்து வழிகாட்ட வேண்டும் என்பது திருவள்ளுவர் திருவுள்ளம். அவ்வகையில் திருக்குறள் கூறும் சமுதாயத்தை, அவர் உருவாக்க விரும்பிய, நல்ல, சிறந்த சமுதாயத்திற்கான கருத்துகளை விளக்குவ தாக இக்கட்டுரை அமைகின்றது.