பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் சமுதாயமும் 85

சமுதாயம்

மனிதன் கூட்டமாகச் சேர்ந்து வாழத் தொடங்கியபோது சமுதாய அமைப்புத் தோன்றியதெனலாம். கூட்டமாகச் சேர்ந்து வாழும்போது கூட்டத்திலுள்ள தனிமனிதனுக்கும், மொத்தக் கூட்டத்துக்குமான நெறிமுறைகள் ԼI 3Ն} படிப்படியே தோன்றி வளர்ந்தன. இவை பின்னர் சட்ட திட்டங்களாகவும், சமுதாய ஒழுங்குமுறைகளாகவும் மாறின. இவ்வாறு இயல்பாகத் தோன்றி வளரும் முறைகள் சூழ்நிலை யாலும், அம்மக்களின் அறிவுநிலை, நம்பிக்கைகள், நாகரீகம். பண்பாடு ஆகியவற்றிற்கேற்ப நல்லனவாகவோ, தீயன வாகவோ அமையலாம். சில பின்வருவோரால் புறக்கணிக்கப் படலாம். அப்போது சமுதாயத்தில் பல குழப்பங்களும் அமைதியின்மையும் தோன்றிச் சீரழிவு ஏற்படுகின்றது, இதைக்காணும் நல்நெஞ்சினர் இக்குறைகளைப் போக்கி நல்ல சமுதாயம் அமையப் பாடுபடுகின்றனர். அதற்காக அறக்கருத்துகளைக் கூறி அமைதியையும் ஒழுங்கையும் ஏற்படுத்த முனைகின்றனர். தமக்கென வாழாப் பிறர்க்குரிய மாந்தரான இவர்களின் நல்லுரையால் சமுதாயம் செழிப்பும் செம்மையும் அடைகின்றது. அவ்வகையில் வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் நூலான திருக்குறள் மண்ணில் நல்லவண்ணம் வாழப் பல வழிகளைக் கூறுகின்றது. அவற்றைத் தனிமனிதருக்கானவை, குடும்பத்துக்கானவை, அரசுக்கானவை எனப் பிரித்தறிதல் தெளிவு தரத்தக்க தாகும்.

தனிமனிதன்

ஒரு முழுமை என்பது பல கூறுகளின் ஒருங்கிணைவாகும். அந்த முழுமைக்கென்று பல சட்ட திட்டங்கள் வகுக்கப்படும். அவ்வாறே அம்முழுமையிலுள்ள பகுதிகளுக்கும் பல சட்ட திட்டங்கள் வகுக்கப்படும். பகுதிகளின் சரியான கூட்டுறவே முழுமையின் சிறப்பாகும். அதுபோன்றே தனிமனிதனின்