பக்கம்:மதன கல்யாணி-1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 X- மதன கல்யாணி

நம்முடைய மனதில் உண்டாகிறது. அப்படி இருக்க, இத்தனை வருஷ காலம் பழகிய அவரைக் காண்பது விஷம் போல இருந்தால், அவரை மணந்து என்னுடைய ஆயுள்காலம் முழுதும், அவரோடு நான் கூடி எப்படி வாழ்ந்து என்னவிதமான சந்தோ ஷத்தை அடையப் போகிறேன்! வீட்டின் தலைவர்களாய் இருப்ப வர்கள் சிறியவர்கள் தமக்கு அடங்கியவர்கள் என்னும் எண்ணத் தினால் பணம் ஒன்றையே கருதி இப்படிப்பட்ட பெருத்த அக்கிரம மான காரியத்தில் இறங்கி அவர்களை சகிக்க முடியாத இம்சைக்கு ஆளாக்குவார்களானால், அதைக் கேட்ட வேறே யார் இருக் கிறார்கள்? தனிமையில் அழுது அழுது, கடைசியில் தற்கொலை செய்து கொள்வதே அதற்கு மருந்து” என்று மிகவும் விசனமாகக் கூறினாள். அவளது பரிதாபகரமான சொற்களைக் கேட்ட மதன கோபாலன் அதற்கு மேல் ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டாமல் சிறிது நேரம் தத்தளித்து மெளனமாக இருந்த பிறகு, “குழந்தாய்! கண்ணியம்மா! நீ மகா படிப்பாளி, உனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. கடவுள் சர்வக்ஞன், உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அவன் நன்றாகக் கவனித்துக் கொண்டே இருக்கிறான். அவன் துஷ்டனுக்குத் தண்டனையும், சிஷ்டனுக்கு வெகுமதியும் தவறாமல் செய்து வைத்து விடுகிறான். கடவுளுடைய ராஜ்ய பரிபாலனத்தில், அக்கிரமம் என்பதே கிடையாது. அப்படி இருக்க, யாதொரு குற்றமும் அற்ற புண்ணியவதியான உன்னைக் கடவுள் அக்கிரமமாக இம்சிக்கவே மாட்டார். இந்தக் கலியானத் துக்கு இன்னம் ஒரு வருஷ காலத்துக்கு மேல் இருக்கிறது. அதற்குள் என்னென்ன விஷயங்கள் நேருமோ! என்னென்ன மாறுபாடுகள் உண்டாகுமோ அதை எப்படி நாம் அறியக்கூடும். அடுத்த நிமிஷத்தில் இன்ன காரியம் நடக்கும் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆகையால், நீ இதை நினைத்து விணில் வருந்தாமல் பொறுமையோடிரு தற்கொலை என்னும் சங்கதியை மறந்துவிடு; இந்த உயிரை விலக்கவும் நிற்க வைக்கவும் நாம் அதிகாரியல்ல; ஒருவன் சாக வேண்டும் என்ற விதி இருந்தால் ஆயிரம் பேர் தடுத்தாலும், அவனுடைய உயிரைக் காப்பாற்ற முடியாது; அவன் பிழைத்திருக்க வேண்டும் என்பது விதியானால், அவன் எவ்வளவு துரம் முயன்றாலும் அவனுடைய உயிர் நீங்காது. ஆகையால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/126&oldid=647022" இலிருந்து மீள்விக்கப்பட்டது