பக்கம்:மதன கல்யாணி-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 115

கருகில் ஒரு மறைவான இடத்தில் போடப்பட்டுள்ள ஒரு சாய்மான நாற்காலியில் கல்யாணியம்மாள் அமர்ந்து கொள்வாள்; பிறகு மதனகோபாலன் அவ்விடத்திற்கு வந்து மிகவும் மரியாதையான துரத்தில் உட்கார்ந்து கொண்டு அடக்கவொடுக்கமாக அவ்விரு சிறுமியருக்கும் வீணை பயிற்றுவிப்பான்; அப்போது கல்யாணி யம்மாள் திரையின் மறைவில் இருந்த வண்ணம் அவர்களது சங்கீதப் பயிற்சியைக் கவனித்துக் கொண்டிருப்பாள் அல்லது தனது கையில் ஏதாகிலும் ஒரு புஸ்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருப்பதாகக் காணப்படுவாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு முன்னால் இருந்த திரையானது பெண்களை அநேகமாக மறைத்துக் கொண்டிருந்தான் ஆனாலும், மதன கோபாலனை மாத்திரம் அதிகமாக மறைக்காமல் இருந்தது. அவன் வீணை கற்றுக் கொடுக்கத் தொடங்கிய நாள் முதலாக ஒவ்வொரு தினமும் அவர்கள் அவ்வாறே செய்து வந்தனர்.

ஆனால், ஒவ்வொரு நாளும், குறித்த காலம் தவறாமல், ஒழுங்காக வந்து கொண்டிருந்தவனான மதனகோபாலன் அன்று ஒன்றரை மணி நேரம் வரையில் வராமல் இருந்தது, அந்த மூன்று ஸ்திரிகளுக்கும் அபூர்வமாக இருந்தது ஆனாலும், சிறிது நேரத் திற்கு முன் நடந்த சம்பவங்களில் அதை அவ்வளவாகப் பாராட்டாமல் தங்களது நினைவை வேறிடத்தில் செலுத்தி இருந்தனர். கல்யாணியம்மாள் தனது புத்திரனது துர்ப்புத்தி, கீழ்ப் படியாமை முதலியவற்றைப் பற்றியும் நினைத்து, பலவகையான வாதனைகளால் உலப்பப்பட்டு சஞ்சலக் கடலில் ஆழ்ந்து மெய் மறந்து ஏகாந்தமாக உட்கார்ந்த தருணத்தில், வேலைக்காரன் மதன கோபாலனது வரவை அவளிடம் அறிவிக்கவே, அவள், “பெண்களைப் போகச் சொல், நான் இதோ வந்து விட்டேன்” என்று செய்தி சொல்லியனுப்ப, அவ்வாறே சிறுமியர் இருவரும் வீணை மண்டபத்தை அடைந்தனர். மதனகோபாலனும், அங்கே வந்து தனது வழக்கமான மூலையில் உட்கார்ந்து கொண்டான். அதற்குள் கல்யாணியம்மாள் சரேலென்று எழுந்து தண்ணிரால் தனது முகத்தை நன்றாக அலம்பித் துடைத்துக் கொண்டு மிகவும் பாடுபட்டுத் தனது முகத்தின் துன்பக் குறிகளை மாற்றிக் கொண்டு இரண்டொரு நிமிஷ நேரத்தில் வீணை மண்டபம் வந்து தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/133&oldid=647036" இலிருந்து மீள்விக்கப்பட்டது