பக்கம்:மதன கல்யாணி-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மதனகல்யாணி

இப்பேர்ப்பட்ட அழகன் என் வயிற்றில் பிறக்கக் கூடியவன் அல்லவா இவன் கேவலம் ஓர் ஏழையின் வயிற்றில் பிறக்கும்படி நேர்ந்தது என்ன கொடுமை! பெருத்த சமஸ்தானத்துக்கு அதிபதி யாக இருந்து சகலமான சுகபோகங்களையும் அனுபவிக்க அருகனான இந்த மன்மத புருஷன் கேவலம் கைத்தொழில் செய்த பிறர் வீட்டு ஸ்திரீகளிடம் அடங்கி ஒடுங்கி வயிறு வளர்க்கும் நிலைமையில் இருக்கிறானே! என்ன கடவுளின் அமைப்பு!” என்று கல்யாணியம்மாள் ஒரு நாளையில் ஆயிரம் தரம் நினைத்துப் பரிதாபமும் வியப்பும் இரக்கமும் கொண்டிருப்பாள். அவ்வாறு கல்யாணியம்மாள் அவனது ரூபலாவண்ணிய குணாதிசயங்களை மனனம் செய்து செய்து மெளனப் பேராநந்தத்தில் ஆழ்ந்திருந்த சமயங்களில், தனது புத்திரனான மைனரது விகார ரூபமும், துர்க்குணங்களும், துர்நடத்தைகளும் நினைவுக்கு வந்து அவளது மனத்தில் உள்ள இன்ப ஊற்றைக் கலக்கி சீர்குலைத்துச் சின்னா பின்னமாக்கி, அவளைத் துன்பக் கடலில் ஆழ்த்திவிடும். அந்தச் சமயத்தில், அவள் “ஐயோ! எந்த தெய்வமாவது உலகத்தாருக்கு முன் வந்து, ‘கல்யாணயம்மாளுடைய மகன் மைனரல்ல; மதன கோபாலனே’ என்று விளம்பரப்படுத்தி விடுமானால், ஆகா! அதற்காக என்னுடைய உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் தானம் செய்து விடுவேன்!” என்று தனக்குத் தானே எண்ணமிட்டு மனமாழ்கி நெடுமூச்செறிவாள்.

அவள் நிரம்பவும் கட்டான தேகத்தையும், மகா உன்னதமான கனிந்த அழகையும் பெற்றிருந்தாள் என்பது முன்னரே தெரிந்த விஷயம். அவள் தனது கணவனிடத்திலேகூட உண்மையான வாத்சல்யத்தையும் மோகத்தையும் கொண்டவளன்று. பெருத்த செல்வத்தையும், செல்வாக்கையும் விரும்பியே அவள் வயோதிக ரான அந்த மனிதரை மணந்து கொண்டாள் என்பதும் தெரிந்த விஷயம். உலகத்தில் உள்ள எந்த மனிதரிடத்திலும் அவளது மனம் அபிமானத்தினால் இளகியறிந்த தன்று. தனது புத்திரிகளிடத் திலேகூட அவள் அந்தரங்கமான ஆழ்ந்த அன்பை அவ்வளவாகக் கொண்டவளன்று. அப்படிப்பட்டவளான கல்யாணியம்மாளது மனம் மதனகோபாலனைக் கண்ட மாத்திரத்தில் முதல் பார்வை யிலேயே அனலில் வைத்த மெழுகு போல உருகிப் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/136&oldid=647041" இலிருந்து மீள்விக்கப்பட்டது