பக்கம்:மதன கல்யாணி-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மதன கல்யாணி

சிறிது நேரம் தவித்த பிறகு தனது சஞ்சலக் குறிகளை மறைத்துக் கொண்டு தனக்கெதிரில் ஒரு கஜ தூரத்தில் விலகி நின்ற கல்யாணி யம்மாளை நோக்கிப் புன்னகை பூத்த முகத்தோடு நயமாகப் பேசத் தொடங்கி, “அம்மணி தாங்கள் இவ்வளவு துரம் வற்புறுத் துகையில், நான் உட்காராமல் இருப்பது பிசகு, இதோ உட்கார்ந்து கொள்ளுகிறேன். ஆனால், உட்கார்ந்து கொள்வது மாத்திரம் போதுமா? தங்களுடன் சந்தோஷமாகப் பேச வேண்டாமா? என்னுடைய உடம்பு சரியான நிலைமையில் இல்லை: மனதோ வேறிடத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட அவஸ்தையில், நான் தங்களோடு சந்தோஷமாக எப்படிப் பேசப் போகிறேன்? இன்று மாத்திரம் தாங்கள் என் மேல் தயை புரிந்து மன்னித்துக் கொள்ளுங்கள், கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாது; நான் தங்களுடைய சேவகன் ஒவ்வொரு நாளும் இந்த மாளிகைக்கு வர வேண்டியவன். தங்களுக்கு எந்த நேரம் செளகரியப்படுமோ அதைக் குறிப்பிட்டால், அந்தப்படி வந்திருந்து, அரை நாழிகை யல்ல, அரை நாள் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போகிறேன்; இந்த ஒரு பொழுது மாத்திரம் தாங்கள் என்னை விட்டுப்பிடிக்க வேண்டும்” என்று நயமாக இறைஞ்சி மன்றாடினான். அதைக் கேட்ட கல்யாணியம்மாளது முகம் மாறுபட்டது; அவள் அதுகாறும் ஏக சக்கராதிபதியாக @ தனது சித்தமே சட்டமாக மற்ற எல்லோரும் நிறைவேற்றும்படி செய்து வந்தவள்; தான் சொல்வது சரியானதோ தவறானதோ பிறர் அதைச் செய்தே தீர வேண்டும் என்ற கொள்கை உடையவள், எவரேனும், அதை மறுத்து மறுமொழி கூறினாலும், அல்லது, அதற்கு மாறான காரியம் செய்தாலும், அவளுக்கு ரெளத்திரா காரமான கோபம் வந்துவிடும்; அதன் பிறகு அவள், யானை தனக்குத் தீங்கிழைத்தவனை மனதிற்குள்ளாகவே பகைத்து சமயம் பார்த்து நசுக்கி விடுவது போல, விஷயம் அற்பமானதானலும், அவள் அதை மனதில் வைத்துக் கொண்டு, தன்னிடம் முரணிய மனிதருக்குத் தீங்கிழைக்கவே வழி தேடுவாள். கல்யாணியம்மாள் அப்படிப்பட்ட குணமுடையவளாய் இருந்தும், மதனகோபால னது விஷயத்தில் அவளுக்கு விவரிக்க ஒண்ணாத ஒரு வகையான பிரேமையும் கவர்ச்சியும் ஏற்பட்டு விட்டமையால், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/154&oldid=649594" இலிருந்து மீள்விக்கப்பட்டது