பக்கம்:மதன கல்யாணி-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் #37

அவளது வேண்டுகோளை அவ்வளவு மறுத்ததற்கும், அவள் பெருமையோடு மென்மேலும் தனது விருப்பத்தையே பிடிவாத மாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அவனோடு தனிமையில் அரை நாழிகை நேரமாகிலும் பேசவேண்டும் என்று அவள் நீண்ட காலமாக ஆவல் கொண்டிருந்ததன்றி, அவளது மனோவிகாரங் களோ, எந்த விதத்திலும் அதிக்கிரமமான பிடிவாதமுடையன ஆதலால், தனது மனத்திலுண்டாம் வேட்கைகள் நிறைவேறினால் அன்றி, அவளது மனமும் தேகமும் கட்டிலடங்குவது மகா துர்லபமாக இருந்தது. ஆதலால், மதனகோபாலன் மறுநாள் வருவ தாகச் சொன்னதைக் கேட்ட கல்யாணியம்மாள் தான் அவ்வளவு துரம் கெஞ்சி மன்றாடியும், மிகவும் கீழ் நிலைமையில் உள்ள அந்த மனிதன், தனது அவாவைப் பூர்த்தி செய்யவில்லையே என்ற ஒரு வகையான மனத்தாங்கல் சிறிது ஏற்பட்டது; மகா உரமான அவளது மனம் தான் பிடித்த பிடியை விடுகிறதா என்று பெரும்பாடு பட்டுத் துடிதுடித்து அடங்காமல் கொந்தளித்து எழுந்தது; தேகமோ அவளது கட்டிலடங்காமல் ஆகாயத்தில் பறக்கும் போலிருந்தது. அவளது கைகளும், மார்பும், தேகமும் அதிகமான படபடப்பினால் திமிறி கட்டிலடங்காமல் பதறின. உடனே கல்யாணியம்மாள் மிகவும் இளக்கமான பார்வையாக அவனைப் பார்த்து, “அடே மதனகோபாலா! என்ன பெருத்த காரியத்தைச் செய்யும்படி நான் உன்னிடம் கேட்டு விட்டேன்? உன் விஷயத்தில் நான் எவ்வளவு ஆழ்ந்த பிரியம் வைத்திருக் கிறேன் என்பதை நீ உணர்வாயானால், நீ என்னுடைய வேண்டு கோளை இப்படி அலட்சியம் செய்திருப்பாயா ஆகா! என் மனமும் தேகமும் இப்போது எப்படி பதறுகிறது தெரியுமா (சிறிது யோசனை செய்தபின் அவனிடம் நெருங்கி) நாளைய தினம் வீணை கற்றுக் கொடுத்த பின் இந்த இடத்துக்கு அவசியம் வருவாயா? உன்னுடைய பேச்சை நம்பலாமா?” என்று மிகவும் அதிகரித்த நயத்தோடு வினவிய வண்ணம் அவனது அழகு வழிந்த முகத்தையும் விசாலமான வசீகரக் கண்களையும் சற்று உற்று நோக்கினாள். அவளது சொல்லைக் கேட்ட மதனகோபாலன் சிறிது தத்தளித்தவனாய் புன்சிரிப்போடு மறுமொழி கூறி அவள் கேட்டுக் கொண்டபடி மறுநாள் அதே நேரத்துக்கு வருவதாக ஒப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/155&oldid=649595" இலிருந்து மீள்விக்கப்பட்டது