பக்கம்:மதன கல்யாணி-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 14?

விட்டது. ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு சீமான் அவளது தரிசனத்திற்காக வந்து காத்திருந்து பாதகாணிக்கை சமர்ப்பித்து, அவளது பரிபூரணமான அருளுக்கும் பிரசாதங்களுக்கும் பாத்திர ராகித் திரும்பிப் போவதுண்டு; ஆனால் அவள் அவர்களைக் கொண்டு தனக்கு ஒவ்வொரு நாளும் தபால் மூலமாக பல கடிதங்கள் எழுதச் செய்வாள். எப்படியெனில், கடிதம் எழுதுபவர் வேறொரு ஜெமீந்தாரது பெயரை எழுதி, அவர் அவளிடம் மையல் கொண்டிருப்பதாகவும், அவள் தமக்கு ஆசை நாயகியாக இருக்கச் சம்மதித்தால், தமது சமஸ்தானத்தை அவள் பேரில் எழுதி வைத்து விடுவதாகவும், அதைப் போவவே, வேறு பலவகை யாகவும் எழுதி அனுப்பச் செய்வாள்; அவளும் நாடகத் தலைவரான கிழவரும் ஒன்றாக இருக்கையில் தபால்காரன் தனது கடிதங்களைக் கொடுக்கும்படியாக ஏற்பாடு செய்திருப்பாள். அவள் அவைகளை வாங்கி, இரண்டொன்றைக் கிழவருக்கு எதிரில் பிரித்துப் படிப்பாள்; உடனே அவள் நிரம்பவும் கோபம் கொண்டவள் போல, அவைகளைத் தனது காலடியில் போட்டு உதைத்து மிதித்து அவற்றின் மீது எச்சிலை உமிழ்ந்து அவைகளையும் படிக்கப்படாத மிகுதிக் கடிதங்களையும் ஒன்றாகச் சேர்த்து நெருப்பில் எறிந்து விடுவாள்; அல்லது கிழித் தெறிந்து விடுவாள். தவிர, இரண்டொரு முறை, நூறு ரூபாய் நோட்டுகளை வைத்தனுப்பச் செய்து, கடிதத்தைப் பிரித்து உள்ளே இருந்த நோட்டைப் பார்த்து, அதைக் கிழவரிடம் காட்டி விட்டு நோட்டோடு கடிதத்தை நெருப்பில் போட்டு எரித்துவிடு வாள். இவ்வாறு அவள் நிரம்பவும் தந்திரமாக நடந்து கொண்டு, எந்தப் புருஷனிடத்திலும் பகஷபாதமாக நடவாமல், எல்லோரை யும் சமமாக சந்தோஷிப்பித்து, எல்லோரிடத்திலும் பெரும் பொருள் அபகரித்து வந்தால் நாடகத் தலைவரான கிழவரோ அந்தப் பெண்ணழகி பதிவிரதா சிரோரத்தினம் என்றும், அவளை அந்த ஜென்மத்தில் திண்டும் பாக்கியம் பெற்ற ஆண்மகன் தாம் ஒருவரே என்றும் நினைத்து அளவளாவி, ஆனந்தக் கூத்தாடி, அவளை உச்சிமோந்து, உள்ளங்காலைத் தாங்கி, கன்னங்களைத் தடவி, காலைப் பிடித்துவிட்டு, ஒவ்வோர் இரவிலும் ஊரார் பொருளை எல்லாம் அவர் எந்த வழியில் திரட்டுகிறாரோ அதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/159&oldid=649599" இலிருந்து மீள்விக்கப்பட்டது