பக்கம்:மதன கல்யாணி-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மதன கல்யாணி

9-ம் அதிகாரம் பாணிக்கிரகணமும் சாந்தியும்

றாவது அதிகாரத்தின் முடிவில் மாரமங்கலம் மைனர் இரவு இரண்டு மணி சமயத்தில் ஆலந்துருக்கு அருகில் இருந்த ஒரு பங்களாவில், பாலாம்பாள் என்ற ஒரு நாடகப் பெண்ணினிடம் பாணிக்கிரகணம் செய்து கொண்டிருந்தான் அல்லவா! அவ்விடத் தில் அதற்கு மேல் நிகழ்ந்த சம்பவங்களைக் கவனிப்போம். பாலாம் பாள் என்ற அந்த மங்கை நிரம்பவும் யெளவனப் பருவத்தின ளாகவும், அழகில் அநேகமாய் மோகனாங்கிக்கு இரண்டாவதாகச் சொல்லத்தக்க அதி சுந்தர தியாகவும் இருந்தாள். ஆனால் தேக

<

சுத்தத்திலும் குணங்களின் மேம்பட்ட அமைப்பிலும் அவளுக்கும்

   இவளுக்கும் ஒற்றுமையே இல்லாதிருந்தது. மோகனாங்கி

பாலாம்பாளோ வெளிப்பார்வைக்கு அளவு கடந்த நாணம், மடம், அச்சம் முதலிய உத்தம குணங்களை வகித்துக் கொண்டு, அந்தரங்கத்தில், ஒரு சமயத்தில் ஒரே புருஷனோடு பேசி, அவனது மனம் கோணாமல் நடந்து கொள்ளுவாள். ஏனெனில், அந்த நாடகத்தின் சொந்தக்காரரான அறுவது வயது நிறைந்த ஒரு மனிதருக்கு அவள் ஆசை நாயகியாக இருந்தாள். அந்த யெளவனப் புருஷர், அவள் மீது ஆண்வாடை வீசக்கூடாது என்று, அவளை ஊருக்கு வெளியில் தனிமையான ஒரு பங்களாவில் ரகசியமாகக் குடிவைத்திருந்தார். அவர் அவன் மீது சந்தேகம் கொள்ளாதிருக்கும் பொருட்டு, அவள் பலமாக வெளி வேஷம் போட்டு, அவரது பெருத்த வருமானங்களை எல்லாம் பலவழிகளில் அவள் கொள்ளையடித்து வந்தாள். அவ்வாறு பெருத்த பணக்குவியலைக் காணக்கான, அதே பேராசையும் பெரும் பித்தமும் அவளது தலைக்கேற, அவள் இரவு பகல் பணம் பணம் என்று பனப்பேய் கொண்டலைந்து ஒவ்வொரு நாளும் எண்ணிறந்த ஆடுதன் ராஜாக்களின் தலைகளைத் தடவிக் கொண்டே வந்தாள்.

அவள் சென்னைக்கு வந்த ஆறுமாத காலத்திற்குள், அவளுக்கு சற்று ஏறக்குறைய ஆயிரம் சீமான்களது திருட்டு நட்பு ஏற்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/158&oldid=649598" இலிருந்து மீள்விக்கப்பட்டது