பக்கம்:மதன கல்யாணி-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 157

உட்கார்ந்திருந்தனர். மைனரது தேகத்தில் அதுகாறும் எழுந்து தகித்துக் கொண்டிருந்த காமத்தி எல்லாம், தண்ணில் ஆழ்த்தப் பட்ட தணல் போல, இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விட்டது. மைனரது துரதிர்ஷ்டம் எந்த விஷயத்தையும் முடியும் சமயத்தில் கத்திரித்து விடுவது வழக்கம் ஆதலால், பாலாம்பாளது விஷயத்தில் அவனது மனோரதம் நிறைவேறாமல் போய்விட்டது. அவ்வாறு இரதிதேவியின் ஆஸ்தான மண்டபத்தில் புதிய மணமகனும் மணவாட்டியும் இரும்புப் பெறியில் அகப்பட்ட எலிகள் போல உட்கார்ந்திருக்க, அந்த பங்களாவில் உண்டான கூக்குரல் இரண்டொரு நிமிஷத்தில் அதிகரித்துத் தோன்றி, பிறகு அது அழுகையாகவும் அலறலாகவும் மாறி, சிறிது நேரத்தில் யாவும் ஒடுங்கிப் போய்விட்டது. அடிகளின் ஒசையும், கதவுகள் உடைப்பட்ட ஒசையும் நன்றாகக் கேட்டன. திருடர்கள் வேலைக் காரர்களை எல்லாம் அடித்து சின்னாபின்னமாக்கியதும் நன்றாக விளங்கியது. அதை உணர்ந்த காதலனும் காதலியும் என்ன செய்வதென்பதை அறியமாட்டாமல், பெருத்த திகில் கொண்ட வராய் திருடர்கள் தாங்கள் இருந்த அறைக்கு வந்து விட்டால், தாங்கள் என்ன செய்கிறது என்று நினைத்து பெரிதும் கதிகலங்கி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதற்கு மெத்தைப் படிகளில் தடதடவென்ற ஓசை கேட்டது; தாங்கள் இருந்த இடத்திற்கே திருடர்கள் வருவதாக அவர்களுக்கு உடனே தோன்றவே, அவர்கள் இருவரும் சடக்கென்று கட்டிலை விட்டுக் கீழே இறங்கினார்கள். மைனர் கோழைத்தனம் நிரம்பிய அதிசூரன் ஆதலால், அவனது உடம்பு கட்டிலடங்காமல் வெடவெட வென்று நடுங்குகிறது. அவன் நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்து, தப்பி ஓடிப்போவதற்காகிலும், மறைந்து கொள்வதற்காகிலும் வசதி இருக்குமோ என்று கவனிக்கிறான்; பாலாம்பாளின் பின் பக்கமாகப் போய் மறைந்து கொள்ளுகிறேன்; ‘ஐயையோ திருடர்கள் இங்கே வந்து விடுவார்கள் போல் இருக்கிறதே! என்ன செய்கிறது! வெளியில் போக வழி ஏதாகிலும் இருக்கிறதா?” என்று கூறித் தவிக்கிறான். ஆனால் பாலாம்பாளோ நிரம்பவும் மனோதிடம் உடையவள் ஆதலால், விசையாக ஒடி அந்த அறைக் கதவின் உட்புறத்தில் இருந்த தாழ்ப்பாளை நன்றாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/175&oldid=649617" இலிருந்து மீள்விக்கப்பட்டது