பக்கம்:மதன கல்யாணி-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மதன கல்யாணி

கனமுள்ளதாகவும், அழுத்தமானதாகவும் இருந்தது ஆகையால் எளிதில் உடையவில்லை.

அவன் ஒரத்தில் நின்று கொண்டிருந்தமையாலும், அவனது உதைவு உறுதியானதாக இல்லாதிருந்தமையாலும், அவன் கண்ணாடியை அதிக பலமாக அடிக்கக் கூடாமலிருந்தது. அவன் அந்த நிலைமையில் இருக்க, பாலாம்பாள், திருடர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிப்பதும், மேலே நிமிர்ந்து கண்ணாடியைப் பார்ப்பதுமாக நிரம்பவும் தத்தளித்து நின்றாள்.

கதவிற்கு வெளியிலிருந்த திருடர்களோ கதவை அழுத்திப் பார்த்து, அது உட்புறத்தில் தாளிடப்பட்டிருந்ததை உணர்ந்தனர். அப்படிப்பட்ட இடையூறுகளை விலக்குவதற்குத் தக்க ஆயுதங்களை அவர்கள் எடுத்து வந்திருந்தனர் ஆதலால் அவர்கள் ஒரு தமிரை எடுத்து தாழ்ப்பாள் இருக்கக்கூடிய இடத்திற்குக் குறிப்புப் பார்த்து ஒர் அழுத்து அழுத்தித் திருகவே, கதவில் ஒரு கை நுழையும்படியான வட்டமான பாகம் அறுந்து கீழே வீழ்ந்து விட்டது. அதனால் உண்டான துளையில் திருடர்களுள் ஒருவன் தனது கையை நுழைத்து, தாழ்ப்பாளை ஒரு நொடியில் திறந்து விட்டுக் கதவைத் தள்ளினான்; அது சிறிதளவு திறந்து கொண்டு போய் கட்டில் முதலிய சாமான்களில் முட்டிக் கொண்டது; திருடரது தலை நுழைவதற்கு மாத்திரம் இடைவெளி ஏற்பட்ட தன்றி, அவர்களது உடம்பு நுழைவதற்குப் போதுமான திறப்பு உண்டாகவில்லை. அதைக் கண்ட திருடர் உண்மையை உணர்ந்தனர்; உட்புறத்தில் சாமான்கள் தடபுடலாக உருட்டப் பட்டதனால் சிறிது முன் உண்டான ஓசை அவர்களுக்கும் எட்டியது. ஆகையாலும், மைனர் கண்ணாடியை உடைத்துக் கொண்டிருந்த அடியோசை அப்போதும் வந்து கொண்டிருந்தமை யாலும், தாங்கள் கதவைத் திறக்காமல் தடுக்கும் பொருட்டு உட்புறத்தில் ஏதோ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதை உணர்ந்த கள்வர் பெரிதும் ஆத்திரமும் வீராவேசமும் கொண்டனர். அவர்கள் நால்வர் இருந்தமையாலும், யாவரும் அரக்கர் போன்ற முரட்டு மனிதர்களாக இருந்தமையாலும், நால்வரும் ஒன்றுகூடித் தங்களது முழுபலத்தையும் வெளிப்படுத்தி கதவை உட்புறத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/178&oldid=649620" இலிருந்து மீள்விக்கப்பட்டது