பக்கம்:மதன கல்யாணி-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 493

கொண்டு நிற்கிறான். அவனுடைய முகத்தில் அசடு வழிகிறது. திக்கித் திக்கி என்னவோ பேச வாயெடுக்கிறான்; அச்சம் நெஞ்சை அடைக்கிறது. உடம்பை விகாரப்படுத்திக் கொள்ளுகிறான். அதைக் கண்ட நான், தன்னுடைய சம்பளத்தில் ஏதாகிலும் கொஞ்சம் முன் பணமாகக் கேட்க வந்து அதை வெளியிடமாட்டாமல் அப்படித் தவிக்கிறானோ என்று அதை சாதாரணமாக நினைத்தேன். ஆனாலும், என்னுடைய அனுமதி இல்லாமல், அவன் என்னுடைய சயன மாளிகைக்குள் வந்தது, என் மனதில் பெருத்த ஆத்திரத்தை உண்டு பண்ணியது ஆனாலும், அவன் அறியாத மூடப்பையன் என்ற நினைவினால், அதை அடக்கிக் கொண்டு, வந்த காரியம் என்னவென்று கேட்கிறேன்; அவன் என்னென்னவோ தாறு மாறாகப் பேச ஆரம் பித்து விட்டான். நாடகங்களில் ராஜா வேஷக்காரன் ஸ்திரிவேஷக்காரியை முதலில் கண்டு அவளுடைய அழகை வர்ணித்து, தான் அவளிடத்தில் காதல் கொண்டதாகப் பன்னிப் பன்னி வெளியிட்டு அசங்கியமாகப் பேசுகிறது போல, அவன் பெரிய ராமாயணமாக ஆரம்பித்து விட்டான். அவன் ஏதாவது புஸ்தகத்தில் இருந்து கதை வாசிக்கிறானோ, அல்லது, அவனே என்னிடத்தில் பேசுகிறானா என்ற சந்தேகம் என் மனதில் உதித்துவிட்டது. அவன் என்னைப் பார்த்து கண்ணே என்கிறான்; கண்மணியே என்கிறான்; என்னுடைய காலில் விழுந்து நமஸ்காரம் வேண்டுமானாலும் செய்கிறேன் என்கிறான்; அவன் அன்றிரவு பிழைக்கிறதும் சாகிறதும் என்னுடைய ஒரு வார்த்தையில் அடங்கியிருக்கிறது என்கிறான். இந்த மாதிரி பைத்தியங் கொண்டவன் போல வாயில் வந்தபடி அவன் பிதற்றினான். எனக்கு உடனே வேறொரு சந்தேகம் உண்டாகிவிட்டது. “சரி: இவன் இன்றைக்கு நன்றாகக் குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதற்கு ஒத்தபடியே, கள்ளின் நாற்றமும் கொஞ்சம் வீசியதாகப் புலப்பட்டது. நான் மெய்மறந்து என்னுடைய காதுகளையே நம்பாமல், என்ன செய்வதென்பதை யும் அறியாமல் ஸ்தம்பித்து இரண்டொரு நிமிஷநேரம் மெளனமாக இருந்து விட்டேன். அதைக் கண்ட அவன் இன்னம் அதிகமான துணிவடைந்து, என்னுடைய காலடியில் வந்து நின்று காலைத் தொட்டு வணங்கிக் கெஞ்ச ஆரம்பிக்கவே, எனக்குச் சகிக்க ம.க.1-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/211&oldid=649656" இலிருந்து மீள்விக்கப்பட்டது