பக்கம்:மதன கல்யாணி-1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மதன கல்யாணி

மீனாகூஜியம்மாள், “அவனை நான் புத்திசாலி என்று சொல்ல மாட்டேன். அவன் பொறுக்கி எடுத்த மடையன். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறோமே; ஜெமீந்தார் வீடுகளுக்குள் நம்மைச் சேர்த்து சரிசமானமாக வைத்துக் கொண்டு அன்பாக நடத்தி பணத்தை வாரி வாரிக் கொடுக்கிறார்களே. நம்முடைய அழகைக் கண்டு மோகித்தே அப்படிச் செய்கிறார்கள் என்று நினைத்து விட்டான் போலிருக்கிறது. நீங்கள் புருஷருக்கு ஏங்கிப் போயிருப் பீர்கள் என்று தவறாக எண்ணியே, இப்படி அயோக்கியத்தனமாக நடந்து கொண்டிருக்கிறான். பிஞ்சில் பழுத்த தறுதலை. ஏதோ கொஞ்சம் வீணையில் தேர்ச்சி அடைந்திருக்கிறான் என்று எல்லோரும் புகழ்கிறார்கள் அல்லவா! இதற்குள் அகம்பாவம் வந்து மூடிவிட்டது. இப்படிப்பட்ட துர்ப்புத்தி கொண்டவன் இனி உருப்படமாட்டான். இனி அவனுடைய வித்தை வாண வித்தை தான்” என்று முற்றிலும் அருவருப்பாகக் கூறினாள்.

கல்யாணியம்மாள், “ஆம்; ஆம்; இனிமேல் அவன் குட்டிச்சுவர் ஏறிக் குதிக்கும் வித்தைதான் கற்றுக் கொள்ளப் போகிறான். இனி அவனுக்கு விருத்தியாவது புத்திராபி விருத்திதான். அவனை நான், அறியாத குழந்தைப் பையன் என்றே மதித்திருந்தேன். அவனுடைய முகத்தில் இன்னம் மீசைகூட முளைக்கவில்லை ஆனாலும், அவனுக்குள் ஒரு பெருத்த போக்கிரி ஆள் நுழைந்து கொண்டிருக் கிறான் என்பதை நேற்றுதான் கண்டேன். நான் என்னுடைய பெண்களின் விஷயத்தில் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருந்து வந்தேன். அவன் வந்தால், நானும் பெண்களோடு கூடவே இருந்து அவன் போன பிறகு, அவர்களை அழைத்துக் கொண்டு போவேன். நேற்று இடைநடுவில் எனக்குத் தலைவலி வந்து விட்டது. அப்போதுதான் அவன் ஏதோ புதிய பாடம் ஆரம்பித்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். சரி; வழக்கம் போல சொல்லிக் கொடுத்துவிட்டுப் போய்விடுவான் என்று நினைத்துக் கொண்டு, நான் அவனுக்குத் தெரியாமலே எழுந்து என்னுடைய சயன மாளிகைக்குப் போய் கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டிருந்தேன். கால் நாழிகைக்குப் பிறகு கட்டிலண்டை யாரோ வந்த காலடி ஓசை கேட்டது. நான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டு பார்க்கிறேன். இந்தத் தறுதலை பல்லைப் பல்லைக் காட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/210&oldid=649655" இலிருந்து மீள்விக்கப்பட்டது