பக்கம்:மதன கல்யாணி-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 209

பங்களாவுக்கு வரும்படி எனக்கு இன்று பகலில் செய்தி சொல்லி அனுப்பினார்கள். நான் உங்களிடத்தில் கூட சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்ப் பார்க்கிறேன். அதற்குள் மீனாகூஜியம்மாள், அந்த மதனகோபாலன் வீணை கற்றுக் கொடுக்கும் பங்களாக் களுக்கெல்லாம் செய்தி சொல்லி அனுப்ப, எல்லோரும் வியப்பும் கோபமும் கொண்டார்களாம்; சிலர் அதைப் போலவே அவன் தங்களுடைய ஜாகையிலும் நடந்து கொண்டான் என்று மறுமொழி சொல்லி அனுப்பினார்களாம். இந்த விவரத்தை எல்லாம் மீனாகூஜியம்மாள் எடுத்து என்னிடம் சொன்னார்கள். எனக்கு இந்த விஷயம் நிரம்பவும் ஆச்சரியமாக இருந்ததன்றி அவன் என்னிடத்தில் மாத்திரம் அப்படி ஏன் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் அடைந்திருந்த சந்தேகமும் கவலையும் உடனே தீர்ந்து போயின. அவன் என்னிடத்தில் நடந்து கொண்டது முன் யோசனையின் மேல் செய்ததல்ல என்றும், அது தற்செயலாக நடந்த காரியம் என்றும் நான் உடனே கண்டு கொண்டேன். நேற்றோடு அவனுடைய வாயில் மண் விழுந்து விட்டது. அவனை இன்றைய தினம் ஒரு விட்டிலும் சேர்க்காமல் மீனாக்ஷி யம்மாள் செய்து விட்டார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட கோமளவல்லி “ஐயோ பாவம் இத்தனை நாளும் அவன் நிரம்பவும் யோக்கியன் போல காணப்பட்டானே, அவன் கள் குடிக்கிறவனா அடாடா! அவனுக்கு மாதம் ஒன்றுக்கு முன்னுறு ரூபாய் கிடைக்கும் என்று முன்னொரு தரம் அவன் உங்களிடம் தெரிவித்தானே. அவ்வளவு பணமும் போய்விடுமே! இனிமேல் அவன் சாப்பாட்டுக்கு என்ன செய்வான்?” என்று இரக்கத்தோடு கூறினாள்.

கல்யாணியம்மாள், “அவனுக்குச் சாப்பாட்டைப் பற்றிக்கூட அவ்வளவு கவலை இல்லை. கள்ளைக் குடித்துக் கண்டவன், ஒரு நாளைக்கு அது இல்லாமல் போனால், சும்மா இருக்க மாட்டான்: எங்கேயாவது திருடியாவது முடிச்சவிழ்த்தாவது, குடித்தே திருவான். ஆனால் பல நாளைய திருடன் ஒரு நாளைக்குப் பிடிபட்டு சிறைச்சாலைக்குப் போவது நிச்சயம். அந்த அயோக்கியன் எப்படியாவது ஒழியட்டும். இனிமேல் அவனுடைய பேச்சு நமக்கு எதற்காக? அவன் என்னிடத்திலும் மற்ற இடங்களிலும் ம.க.1-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/227&oldid=649683" இலிருந்து மீள்விக்கப்பட்டது