பக்கம்:மதன கல்யாணி-1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 * மதன கல்யாணி

செய்த தவறுக்கு சுவாமியே பார்த்து அவனை நன்றாக தண்டித்து விட்டார். உங்களிடம் நான் இன்னொரு சந்தோஷ சமாசாரம் சொல்லப் போகிறேன். நம்முடைய தம்பியின் கலியானத்தை இன்னம் ஒரு வாரத்துக்குள் முடித்துவிடத் தீர்மானம் ஆகிவிட்டது. நாளைய தினம் இங்கே விருந்தும் நிச்சயதார்த்தமும் நடக்க ஏற்பாடு செய்து விட்டோம். இனிமேல், கல்யாணியம்மாள் அதி சீக்கிரத்தில் நம்முடைய பங்களாவுக்கு வந்துவிடுவாள்’ என்றாள்.

அதைக் கேட்ட மடந்தையர் இருவரும் பெரிதும் மகிழ்ச்சியும் இன்பமும் அடைந்து தங்களது செவிகளையே நம்பாமல் நின்றனர், உடனே கோமளவல்லி, “நம்முடைய ஐயா. மரண சாஸனத்தில் ஏதோ எழுதியிருப்பதாகவும், அதனால் இன்னம் ஒரு வருஷ காலம் போக வேண்டும் என்றும், நீங்கள் சொன்னிகளே;” என்றாள்.

கல்யாணியம்மாள், “அது உண்மைதான். நம்முடைய தம்பி நேற்று சாயுங்காலம் என்னிடத்தில் இதைப்பற்றித் தான் பேசினான். தன்க்கு உடனே கலியாணத்தைச் செய்த வைக்க வேண்டும் என்று அவன் பிடிவாதமாக என்னிடம் பேசினான். இந்த ஊரோ நிரம்பவும் கெட்டுப் போன ஊர். கெட்ட வழியில் பையனைக் கெண்டு போய்விட எத்தனையோ துஷ்டர்கள் சேருவார்கள். ஆகையால் அவன் ஆசைப்படும் போதே, கலியாணத்தை முடித்து அவனையும் கண்மணியையும் ஒன்றாக வைத்துவிட்டால், அவனுடைய புத்தி வெளியில் அவ்வளவாக நாடாது. அதுவும் தவிர, அவன் அடிக்கடி மீனாகூஜியம்மாளுடைய பங்களாவுக்குப் போய் கண்மணியம்மாள் தனிமையில் இருக்கும் இடங்களில் அவளிடம் விஷமங்கள் எல்லாம் செய்கிறானாம். அதையும் கேள்விப்பட்டேன். ஆகையால், அநாவசியமான தாமதம் செய்தால், ஒரு வருஷத்துக்குள் என்னென்ன விபரீதங்கள் நேருமோ என்று நினைத்து, நானும் மீனாகூஜியம்மாளும் கலியானத்தை உடனே முடித்துவிட வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டோம். நாளைய தினம் முகூர்த்த நாள் ஆகையால், நாளைய ராத்திரி நம்முடைய ஜனங்களுக்கெல்லாம் விருந்து நடந்தி, நிச்சயதாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்று பகல் முழுதும் அதே வேலையாக நானும் மீனாகூஜியம்மாளும் அலைந்து, நம்முடைய பந்து ஜனங்களை எல்லாம் அழைத்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/228&oldid=649684" இலிருந்து மீள்விக்கப்பட்டது