பக்கம்:மதன கல்யாணி-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 215

உடனே திரும்பிப் போகாமல், கல்யாணியம்மாளுக்கு மிகவும் சமீபத்தில் நெருங்கினாள்.

அதைக் கண்ட கல்யாணியம்மாளது மனதில், அவள் மறுபடியும் ஏதோ புகார் சொல்ல வந்திருக்கிறாள் என்ற சந்தேகம் தோன்றவே, அவள் உடனே தனது பொறுமையை இழந்து, “என்ன நான் சொல்லுகிறேன்! காதில் வாங்காமல் வருகிறாயே! மற்ற சங்கதி எல்லாம் அப்புறம் ஆகட்டும். எனக்குப் பசியாக இருக்கிறது. போ சீக்கிரம்” என்று அதிகாரமாகவும் அன்பாகவும் கூறினாள். அதைக் கேட்ட பொன்னம்மாள், அவளிடத்தில் ரகசியமான ஏதோ சங்கதி சொல்ல வந்தவள் போலவும், அவள் தடுப்பதால், தான் வந்த காரணத்தை வெளியிட மாட்டாமல் தவிப்பவள் போலவும், தோன்றி, “போறேன் அம்மா! நம்ப பங்களா வாசல்லே, ஒருத்தி வந்திருக்கிறா. அவ ஒங்களோடே இப்பவே அவசரமாய் பேசணுமாம்” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், மிகுந்த ஆத்திரம் கொண்ட வளாய், “அவள் யாரடி அவ்வளவு கண்டிப்பாக உத்தரவு செய்கிறவள்? அவள் யார் என்பதையும், என்ன வேலையாக என்னிடம் பேச வந்தாள் என்பதையும், கேட்டுக் கொண்டு வார நாங்கள் அதற்குள் போய் போஜனம் செய்துவிட்டு வருகிறோம்”

என்றாள்.

அதைக் கேட்ட பொன்னம்மாள் சிறிதும் அசையாமல் நின்ற படியே, “அவ இஞ்சே ரெண்டு நிமிசத்துக்கு மேலே நிக்க முடியாதாம். ஒடனே நீங்க வரச்சொன்னா ஆச்சு; இல்லாமெப் போனா அவளே உள்ளற வந்துவிடுவாளாம்” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாளுக்கு ரெளத்திராகாரமான கோபம் பிறந்தது. அவள் தனது பசியிலும் கோபத்திலும் தன்னை முற்றிலும் மறந்து, “அது யாரடி அவ்வளவு துரம் துணிந்து பேசுகிற நாய்? வெளியில் யாராவது வேலைக்காரன் இருந்தால், அவளை செருப்பாலடித்து பங்களாவுக்கு வெளியிலே கொண்டு போய் விடச்சொல்” என்று மிகவும் கண்டிப்பாக உத்தரவு செய்தாள். பொன்னம்மாள் அதற்கும் அசையாமல் நின்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/233&oldid=649695" இலிருந்து மீள்விக்கப்பட்டது