பக்கம்:மதன கல்யாணி-1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 #4 மதன கல்யாணி

வந்தே தீருவாள். தள்ளிவிடப்பட்ட மதனகோபாலன் இனிமேல் திரும்பிவர மாட்டான் அல்லவா. ஆகையால் என்னுடைய மனதில் இப்போது சிறிதளவு விசனமே மிஞ்சி நிற்கிறதென்று சொல்ல வேண்டும்” என்றாள். அவளது வார்த்தைகள் கல்யாணியம் மாளுக்கு முற்றிலும் கன்னகடுரமாக இருந்தன; அவர்கள் மேன் மேலும் சம்பாஷிக்கும்படி தான் விட்டிருந்தால், துரைஸானியம் மாள் குத்தலாகவும் மறைபொருளாகவும் பேசிப்பேசி தன்னை மேன்மேலும் வருத்திக் கொண்டே இருப்பாள் ஆதலின், அவர்களது வாயை அவ்வளவோடு அடக்க நினைத்தாள் தான் தனது விருப்பத்திற்கு மாறாக நடந்த மதனகோபாலனை மிகவும் கடுமையாகவும் மனங்குளிரவும் தண்டித்து, அதனால் பூரிப் படைந்திருந்த சமயத்தில், துரைஸானியம்மாள, அவனைப் புகழ்ந்து பேசியது, அவளுக்குச் சகிக்க ஒண்ணாத துன்பமாக இருந்தது. ஆதலால் கல்யாணியம்மாள் தனது இயற்கையான நிமிர்வையும் கம்பீரத்தையும் அதிகாரத் தோற்றத்தையும் காட்டி, “சரி, அதிக நேரம் ஆகிவிட்டது. முதலில் நாம் சாப்பாட்டுக்குப் போவோம்; அதிகப் பிரசங்கம் எல்லாம் இவ்வளவோடு நிற்கட்டும்” என்று கூறிய வண்ணம் அமர்த்தலாகவும் அலட்சிய மாகவும் எழுந்தாள். அந்த வார்த்தை துரைஸ்ானியம்மாளை நேருக்கு நேர் காட்டிப் பேசியதாக இல்லாவிட்டாலும், அது அவளது கன்னத்தில் பளிரென்று அறைந்தது போல இருந்தது. ஆனால் அந்த வார்த்தை கோமளவல்லியைக் குறித்ததென்றா யினும், அவள் நடுங்கி அடங்கி ஒடுங்கி தனது வாயை இறுக மூடிக் கொண்டாள்; துரைஸானியம்மாளோ, தனது தாய் தன்னையே அவ்வாறு கண்டித்தாள் என்பதை உணர்ந்தாள் ஆனாலும், அவளது கோபத்திற்கு தான் அவ்வளவாக அஞ்சவில்லை என்பதை தனது அசட்டையான பார்வையால் காட்டி, வேறு எதையோ பார்ப்பவள் போல, சிறிதும் பயமற்றவளாக நின்றாள். அப்போது அந்தச் சயன மாளிகையின் கதவு திறக்கப்பட்டது. பொன்னம்மாள் என்னும் வேலைக்காரி உள்ளே நுழைந்தாள். அவளைக் கண்ட கல்யாணியம்மாள், “ஏ! பொன்னம்மா! போய் சீக்கிரமாக இலை போடச் சொல், நாங்கள் இன்னம் ஒரு நிமிஷத்தில் வருகிறோம்” என்று சிறிது அதிகாரத்தோடு கூற, பொன்னம்மாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/232&oldid=649693" இலிருந்து மீள்விக்கப்பட்டது