பக்கம்:மதன கல்யாணி-1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மதன கல்யாணி

கொண்டு, மிகுந்த பயபக்தி அடக்க வொடுக்கத்தோடு மிகவும் சுருசுருப்பாகவும் ஜாக்கிரதையாகவும் பரிமாறினாள். கல்யாணி யம்மாள் வெளியுலகத்தை அடியோடு மறந்து, தனது மனமாகிய வேறு உலகத்தின் பாரதப் போரில் ஆழ்ந்து மெய்ம்மறந்தவளாய், முன்னது பின்னது பாராமல், கையில் அகப்பட்டதை எடுத்து உண்ணத் தொடங்கினாள். அவ்வாறு அவள் ஒரு கவளம் சாப்பாட்டை எடுத்து வாயில் வைக்கும் முன் அந்தக் கூடத்தில் சிறிது துரத்திற்கு அப்பால் இருந்த வாசற்படியின் வழியாக திடீரென்று தோன்றிய பொன்னம்மாள் சனியன் போல மறுபடியும் அவளுக்கெதிரில் வந்து நிற்க, அடுத்த நிமிஷம் வக்கீல் சிவஞான முதலியார் வாசற்படிக்கு அப்பால் இருந்த வண்ணம் தமது பாதி உடம்பை காட்டி உட்புறத்தில் எட்டிப் பார்த்து, “ஓகோ போஜன சமயம் போலிருக்கிறது” என்று வற்புறுத்தி வருவித்த புன்சிரிப்போடு கூறினார். உடனே பொன்னம்மாள் கல்யாணியம்மாளைப் பார்த்து, “வக்கீலையா வந்திருக்காங்க சாப்பாட்டு வேளெ, நாக்காலிலே குந்தியிருங்க இன்னு சொன்னேன். குந்த நேரமில்லெ. அவசரமாக ஒரு பேச்சிப் பேசிப்புட்டுப் போவணுமின்னு சொன்னாரு இஞ்சேயே இட்டாந்தேன்” என்று அவரது எதிர்பாராத வருகைக்கு முகவுரை கூறினாள்.

அந்த இருவரது வருகையும், அவர்களது வாக்கியங்களும், துங்குவோரைப் போலிருந்த அந்த மூன்று சீமாட்டிகளையும் தட்டி எழுப்பின. உடனே மூவரும் திடுக்கிட்டு நிமிர்ந்து, தாங்கள் போஜனம் செய்கையில் சிவஞான முதலியார் வந்ததினால் மிகுந்த லஜ்ஜை அடைந்து சிறிது தத்தளிக்க, அவர்களுள் கல்யாணி யம்மாள் அவரை நோக்கி “வாருங்கள் வாருங்கள். உங்களுடைய ஜாகையிலிருந்து புறப்பட்டவுடனே நான் சோமநாதபுரத் தாருடைய பங்களாவுக்குப் போய் நேராக வந்து இப்போது தான் இலையில் உட்கார்ந்தேன்; இதோ ஆகிவிட்டது. அடி பொன்னம்மா! சீக்கிரமாகப் போய் ஒரு நாற்காலி கொணர்ந்து போடு; ஐயா இப்படியே உட்கார்ந்து கொள்ளட்டும்” என்றாள்.

அதைக் கேட்ட சிவஞான முதலியார், “இருக்கட்டும், ருக்கட்டும். நீங்கள் சாப்பிடுங்கள். எனக்கு நாற்காலி வேண்டாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/244&oldid=649717" இலிருந்து மீள்விக்கப்பட்டது