பக்கம்:மதன கல்யாணி-1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மதன கல்யாணி

சிவஞானம் முதலியார் உடனே அதை விளக்கிற்கருகில் பிடித்துக் கொண்டு அடியில் வருமாறு படிக்கலானார்:

பெருத்த கூட்டுக் கொள்ளை’ மூன்று படுகொலைகள் திருடர்களுள் ஒருவன் பிடிபட்டான்

ஆலந்துருக்கு அருகில், ராஜபாட்டையின் மேல் உள்ள மோகன விலாஸ் என்ற பங்களாவில் நேற்று இரவு மூன்று மணிக்கு ஒரு பெருத்த பயங்கரமான கூட்டுக் கொள்ளை நடந்ததாம். அவ்விடத்தில் பாலாம்பாள் என்ற ஓர் அழகிய பெண் இருந்து வருகிறாள். மைசூரிலிருந்து வந்துள்ள பாலிகா மனமோகன நாடகக் கம்பெனியில் உள்ள முக்கியமான பெண் வேஷக்காரி களுள் அவள் ஒருத்தியாம். அவளது அழகையும் திறமையையும் கண்டு மோகித்து, அவளை அடைய மாட்டாமல் ஆயிரக் கணக்கில் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகள் மதிமயங்கி அலை கிறார்களாம். அவர்களுள் ஒருவனான யெளவனப் புருஷன் ஒருவன் சென்ற இரண்டு தினங்களாக அந்த பங்களாவுக்கு அருகில் காத்திருந்து அவளிடம் தனது ஆசையை வெளியிட, அவள் அதற்கு இணங்கவில்லையாம். அதனால் அவள் மீது கோபங் கொண்ட பையன் அவளைப் பலவந்தமாகத் துக்கிக் கொண்டு போகும் கருத்தோடு சுமார் பத்து ஆள்களுடன் அவளது பங்களாவில் நுழைந்தானாம். அங்கே கூச்சலிட்ட மூன்று வேலைக் காரிகளை ஸ்மரனை தப்பிப் போகும்படி அடித்துப் போட்டு விட்டு, பாலாம்பாள் இருந்த மேன்மாடத்திற்குள் போய் சுமார் ஐம்பதினாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஆடை ஆபரணங்களை அபகரித்துக் கொண்டு, அவளைப் பலவந்தமாகத் துக்கும் முன், அவளால் டெலிபோன் மூலமாக அனுப்பப்பட்ட செய்தியைக் கேட்ட ஆலந்துர் போலீஸார் மோட்டாரில் சென்று உள்ளே நுழைய, திருடர்கள் எல்லோரும் தப்பியோடி விட்டனர். அவர்களை அழைத்து வந்த யெளவனப் புருஷன் மாத்திரம் ஒட மாட்டாமல் படுக்கையின் கீழே ஒளிந்து கொள்ள, அவனைப் போலீஸார் எவ்வளவு வற்புறுத்தியும், அவன் தனது பெயரையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/248&oldid=649725" இலிருந்து மீள்விக்கப்பட்டது