பக்கம்:மதன கல்யாணி-1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 மதன கல்யாணி

பாலாம்பாள்:- ஆகா! நல்ல காரியம் செய்யச் சொன்னிகளே! என்னை என்ன தாசியென்று நினைத்துக் கொண்டீர்களா? அல்லது வேசையென்று மதித்தீர்களா? ஒரு பெரிய தனவந்தர் தமக்கிருக்கும் ஏராளமான சொத்துகளையும், சம்பாத்தியங்களை யும் எனக்கு எழுதி வைத்துவிட்டு என்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார். கண்மணியை இமைகள் காப்பது போல, அவர் என்மேல் தம்முடைய உயிரையே வைத்து என்னைக் காப்பாற்றி வருகிறார். நான் இந்த மாதிரி அன்னிய புருஷனோடு சிநேகம் வைத்துக் கொண்டு, அவனோடு நடுஇரவில் என்னுடைய படுக்கை அறையில் இருந்தேன் என்பதை அவர் கேள்விப் படுவாரானால், அவர் இனிமேல் என்னுடைய முகத்திலும் விழிப்பாரா? தங்கள் பையனுடைய தயவினால், எனக்கு இப்போது இரண்டு லட்சம் பெறுமான சொத்துகள் போய் விட்டன. தங்களுடைய தயவினால் நான் இனிமேல் எனக்கு வரப்போகும் புருஷனையும், அபாரமான பேருதவியை யார் செய்யப் போகிறார்கள்! - என்று கூறினாள்.

அதைக் கேட்ட சிவஞான முதலியார் ஒருவாறு ஏமாற்றமும் வெட்கமும் அடைந்தார் ஆனாலும், அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிறிது தத்தளித்தவளாய், “குழந்தாய் கோபித்துக் கொள்ளாதே; நீ இப்போது சொன்ன கலியான விவரம் எல்லாம் எங்களுக்குத் தெரியாதிருந்தமையால், நான் அப்படிச் சொல்ல நேர்ந்தது. இதனால் பெருத்த சங்கடங்கள் நேரும் என்று நீ சொல்வதும் நியாயமாகவே இருக்கிறது. ஆனால், நாம் இன்னொரு காரியம் செய்வோமே? உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போகும் அந்த தனவந்தரிடமே நாங்கள் இதைத் தெரிவித்து எங்களுடைய பையனை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டால் என்ன? அவருடைய அனுமதியின் மேல் நீ உன்னுடைய வாக்குமூலத்தை நாங்கள் சொன்னபடி மாற்றிக் கொண்டால் உனக்கு எவ்விதமான சங்கடமும் ஏற்படாதல்லவா, அப்படிச் செய்தால் என்ன? அவர் உன்னிடத்தில் நிரம்பவும் அபிமானம் உள்ளவர் என்று நீ சொல்லுகிறாயே! எங்களுக்கு உண்மையில் உதவி செய்ய வேண்டும் என்ற ஓர் அவா உனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/286&oldid=649806" இலிருந்து மீள்விக்கப்பட்டது