பக்கம்:மதன கல்யாணி-1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 மதன கல்யாணி

நினைக்க வேண்டாம். நீங்கள் சொல்வது என்னுடைய மனப் போக்குக்கு ஒத்ததாக இருந்தால், ஆகட்டும் என்று நான் இணங்கி விடுகிறேன்; இல்லையானால் வேறே ஏதாகிலும் வழியுண்டா என்று பார்க்கலாம்” என்று அந்தரங்க அன்போடு கூற, அதைக் கேட்ட கல்யாணியம்மாள் துணிவடைந்தவளாய், “நமக்குள் ஒருவருக்கொருவர் அந்தரங்கமான நட்பு ஏற்பட்டுவிட்ட பின், இனி நாம் விஷயங்களை மறைப்பது சரியல்ல. உலகத்தார் அறிய எங்களுக்கு மானஹானி வராமல் தடுப்பதாக வாக்குறுதி சொல்லி இருக்கும் உன்னிடம், நான் தவறான பிரரேபணை ஏதாவது செய்து, அதை நீ ஒப்புக் கொள்ளாமல் தள்ளிவிடுவதனால், எனக்கு அவ்வளவு பிரமாதமான அவமானம் வந்து விடுமோ? அது இல்லை. விஷயம் என்னவென்றால், நாம் இருவரும் இது வரையில் சம்பாவித்ததில் இருந்து நம் இருவருக்கும் அதிகமான பேதம் ஒன்றுமில்லை. நீ எனக்கு மருமகள் ஆவதற்கு வேண்டிய சகலமான சிறப்புகளும் மேம்பாடுகளும் உன்னிடத்தில் நிறைவாக இருக்கின்றன. கடைசியில் ஜாதி வித்தியாசம் ஒன்றே நடுவில் நின்று போராடுகிறது, அதைக்கூட நான் லட்சியம் செய்யக் கூடியவள் அல்ல. ஆனால், ஜாதி வித்தியாசம் உள்ளவர்கள் சாஸ்திரப்படி கல்யாணம் செய்து கொள்ள, புரோகிதரும் சுற்றத் தாரும் ஜனங்களும் ஆட்சேபனை சொல்லுவார்களே என்ற ஒரே அச்சத்தினால் நான் பின் வாங்குகிறேன். என்னுடைய சமஸ்தானத்துக்கு நானே ஏகசக்ராதிபதி ஆகையால், நான் இந்நேரம் உன்னை என்னுடைய பையனுக்கு ஜாம் ஜாம் என்று தாலி கட்டி வைத்து விடுவேன். நீயும் என்ன சொன்னாய்; வீட்டில் உள்ள பெரிய மனிதர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமான சம்பந்தம் வைத்துக் கொண்டிருப்பதனால், இழிவும் துன்பங்களுமே நேரும் என்று நீ சொன்னாய். அதில் இருந்து நான் தெரிந்து கொள்வ தென்ன என்றால், பெரியோர் அறிய ஒழுங்கான முறையில் ஏற்படும் பட்சத்தில், இந்த சம்பந்தத்துக்கு நீயும் ஒப்புக் கொள்ளுவாய் என்றே எண்ணுகிறேன். ஆகையால், இந்த விஷயத்தில் நம் இருவர் மனமும் ஒத்துப் போய்விட்டது. குறுக்கில் நிற்பது, ஜாதி என்ற அர்த்தமில்லாத ஆட்சேபனை ஒன்றே. நமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/296&oldid=649826" இலிருந்து மீள்விக்கப்பட்டது