பக்கம்:மதன கல்யாணி-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 மதன கல்யாணி

இருந்தாலும், தாங்கள் அதற்காக என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்? - என்றாள். -

சிவஞான- வேறொன்றும் இல்லை. நீ உன்னுடைய கையால் ஒரு கடிதம் எழுதி எங்களிடம் கொடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் நேரில் வந்ததாகவே இருக்கக்கூடாது. இந்தப் பத்திரம் நெடுநாளைக்கு முன்னரே எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்; நீ இப்போதே ஸ்மரணையில் இருந்த தெளிவடைந்ததாகவும், உன்னுடைய சயன அறையில் இருந்த மைனரைப் போலீசார் தவறுதலாகத் திருடன் என்று மதித்துப் பிடித்துக் கொண்டு போயிருப்பதாக இப்போதே நீ கேள்விப்பட்டதாகவும், நாளைக் காலையில், போலீசாரிடம் உண்மையைத் தெரிவித்து அவரை விடுவிக்கப் போவதாகவும், மைனரைப் பற்றி இன்று இரவு கவலைப் படாதிருக்கும்படி நீ இங்கிருந்து எங்களுக்கு ஆள் மூலமாக இப்போது எழுதி அனுப்பியது போல ஒரு கடிதம் எழுதிக் கொடு. அதுவே போதும் - என்றார்.

அதைக் கேட்ட பாலாம்பாள் அதற்கிணங்க, சிவஞான முதலியார் தமது சட்டைப்பையில் இருந்த வெறுங் காகிதங்களுள் ஒன்றை யும், தமது பவுண்டன் பேனாவையும் எடுத்து பாலாம்பாளிடம் கொடுக்க, அவள் அவரது சொற்படி ஒரு கடிதம் எழுதி, அவரிடம் கொடுத்ததன்றி, பத்திரத்தின் அடியிலும், இரண்டு மாதத்திற்கு முந்திய ஒரு தேதியை சிவஞான முதலியார் போடும்படி செய்வித்தாள். கடிதத்தை வாங்கி ஜாக்கிரதையாக வைத்துக் கொண்ட பின், சிவஞான முதலியார், தாம் போவதாகச் சொல்லிக் கொண்டு எழுந்திருக்க, கல்யாணியம்மாளும் எழுந்து பாலாம் பாளிடம் செலவு பெற்றுக் கொண்டாள். உடனே அவர்கள் இருவரும் அந்தச் சயன அறையை விட்டு வெளிப்பட்டு மெத்தைப் படிகளின் வழியாகக் கீழே இறங்கி வர, லாந்தரோடு ஆயத்தமாக நின்ற வேலைக்காரன், அவர்களுக்கு முன்னால் வெளிச்சம் காட்டி, பெட்டி வண்டியில் அவர்களை ஏற்றுவிக்க, வண்டிக்காரன் குதிரையைத் தட்டி ஒட்ட ஆரம்பித்தான். லாந்தர் வைத்திருந்த வேலைக்காரன் முன்னால் ஒடி இரும்புக் கம்பிக் கதவைத் திறந்து விட, அடுத்த நிமிஷம் பெட்டி வண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/306&oldid=649848" இலிருந்து மீள்விக்கப்பட்டது