பக்கம்:மதன கல்யாணி-1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 மதன கல்யாணி

தொடங்கினான். சிவஞான முதலியார் தங்களது ஆடைகளை மாத்திரம் தங்களுக்குக் கொடுக்கும்படி கேட்க, இன்ஸ்பெக்டர். ஸ்டேஷனுக்கு வந்து தான் எதையும் தர வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, குதிரை தமக்கு அடங்காமல் விரைவாகப் போகிறதாகையால், தான் முன்னால் ஸ்டேஷனுக்குப் போவதாகச் சொல்லி விட்டு குதிரையைத் தட்டிவிட்டு, வண்டிக்கு முன்னால் சென்று மறைந்து போனார். அவ்வாறு அங்கே வந்து தந்திரம் செய்து மூட்டையை அபகரித்துப் போனது, முதல் நாள் அதே வேஷத்தோடு வந்த பெண் ஆதலால், அவள் அடியில் வருமாறு மனதில் எண்ணமிட்டுக் கொண்டு சென்றாள். ‘சரி; மாரமங்கலம் ஜெமீந்தாருக்கு நாம் பூர்வ ஜென்மத்தில் கடன் கொடத்து வைத்தோம். அது இப்போது தானாக என் வழியில் வந்து குறுக்கிடுகிறது. நோற்று, இவளுடைய மகனான மைனர் தன்னிடம் இருந்ததை எல்லாம் கொடுத்தான். இன்று அவனுடைய தாயார் கொடுத்தாள். ‘கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டாதா என்று தனக்குள் நினைத்து அளவளாவிய வளாய் மாயமாக மறைந்து போனாள். கால் நாழிகையில் பெட்டி வண்டி சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை அடைந்தது. உடனே சிவஞான முதலியார் உள்ளே நுழைந்து விசாரிக்க, அந்த ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டரே கிடையாது என்றும் சற்று முன் எந்த இன்ஸ்பெக்டரும் அங்கே வரவில்லை என்றும், அவ்விடத்தி லிருந்த சப் இன்ஸ்பெக்டரிடத்தில் அவர்கள் கேள்வியுற்று முற்றிலும் திகைத்து ஸ்தம்பமாக நின்றனர்.


13-ம் அதிகாரம் தேள்கொட்டித் திருடன் கல்யாணியம்மாள் சிவஞான முதலியாரோடு ஆலந்துரை அடைந்து தனக்கு ஒரு புதிய மருமகளைச் சம்பாதித்துக் கொண்டதற்கு முன் அன்றைய தினம் பிற்பகலில் மீனாகூஜியம் மாளது பங்களாவிற்குச் சென்று, மதனகோபாலனைப் பற்றி பல வகையான அவதூறு மொழிகளைக் கூறி, கண்மணியம்மாளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/311&oldid=649857" இலிருந்து மீள்விக்கப்பட்டது