பக்கம்:மதன கல்யாணி-1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 மதன கல்யாணி

அவர்கள் இருவரும் வெளியிற் போனவுடனே, அப்பெண் பாவை விரைவாகச் சென்று தனது படுக்கையறையை அடைந்து கதவை மூடிவிட்டு அதற்குள் இருந்த தனது சயனத்தில் குப்புறப்படுத்து தனது மனதிற்குள் கரைகடந்து பொங்கி எழுந்து கொந்தளித்து நின்ற விசனவெள்ளத்தைத் தனது கண்ணி மூலமாக வெளியிட்டுக் கோவெனக் கதறியழத் தொடங்கவே, பத்தரை மாற்றுப் பசும்பொன்னைப் பழித்த அவளது தேகத்தின் ஒவ்வோர் அணுவும், காற்றில் அசையும் மாந்தளிர் போல நடுநடுங்கின. கண்ணிர் வெள்ளமும் வியர்வை வெள்ளமும் ஒன்றுகூடி, அவளையும் அவளது உடைகளையும் கட்டில் மெத்தைகளையும் சுத்தமாக நனைத்துத் தரையிலும் பெருகி வழிந்தோடின. அதே நிலைமையில் அந்தப் பேதை மடவன்னம் பிற்பகல் நான்கு மணி நேரம் முதல் மாலை ஏழுமணனி நேரம் வரையில் வீழ்ந்து கிடந்து, துக்கசாகரத்தில் ஆழ்ந்து தேம்பித் தேம்பி அழுவதை அன்றி வேறெதையும் செய்ய அறியாதவளாய் உயிர்சோர, உடல் கரைய, மனமறுக, எண்சாண் உடம்பும் ஒரு சாணாய்க் குறுக, தீயிற்கருகும் வாழைக்குருத்தென வதங்கித் துவண்டு கிடந்தாள். ஆகா! மத்னகோபாலன் மீது அவள் கொண்டிருந்த காதற் பெருக்கை என்னென விவரிப்பது! அது சொல்லிலும் கணக்கிலும் அடங்கத் தக்கதோ காட்டுத்தியினும் வலிதாக ஜ்வலித்து எழுந்த அந்தக் காதல் தீயை ஒரு சிறிதும் பாதிக்க வல்லமையற்ற அவளது கண்ணிர் ஆறானது, தானும் நெருப்பாக மாறி உருக்காக வழிந்தது. அவ்வாறு உணர்வு கலங்கி, அறிவு பிறழ்ந்து, உடல் கருதி, உயிர் தள்ளாடி ஒய்ந்து நெடுநேரம் கிடந்த அந்தப் பெண் பேதையின் மனம் சிறுகச் சிறுகத் தெளிவு பெற ஆரம்பித்தது. அப்போது தான் இருந்தது கனவு நிலைமையிலோ அல்லது நனவு நிலைமையிலோ என்று அவள் ஐயமுறலானாள். கல்யாணியம்மாள் மதனகோ பாலனைப் பற்றிக் கூறிய மொழிகள் உண்மை போலவும் தோன்றின; பொய் போலவும் தோன்றின. கல்யாணியம்மாள் மதனகோபாலன் மீது அபாண்டமான அவ்வளவு பெருத்த அவதுறைக் கற்பித்துச் சொல்ல முகாந்திரம் இல்லை ஆதலால், அதில் ஒரு பாகமேனும் உண்மையாக இருக்க வேண்டும் என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/315&oldid=649865" இலிருந்து மீள்விக்கப்பட்டது